Breaking News :

Wednesday, August 13
.

திருத்தணி சிங்கார வேலவன் கோவில், அரும்பாக்கம், சென்னை


தலமகிமை:

சென்னை மாநகரின் மையப்பகுதியில் உள்ள அரும்பாக்கம் PP Garden பகுதியில் ஆனந்தம் தரும் திருத்தணி சிங்கார வேலவன் திருக்கோவில் அமைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து 5 கிமீ அல்லது சென்னை சென்ட்ரலில் இருந்து 8 கிமீ பிரயாணம் செய்தால் சிறப்பு மிக்க இக்கோவிலை அடையலாம்.  

இத்திருக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி உள்ளிட்ட அனைத்து முருகப்பெருமான் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. கிருத்திகை, சஷ்டி திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் உண்டு.   

தல வரலாறு:

இப்பகுதி புரவலர்கள் மற்றும் முருக பக்தர்களால் கோவில் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.

தல அமைப்பு:
அழகிய சிற்பங்களுடன் கூடிய நுழைவு வாயில் வழியே கோவிலுக்கு செல்லவேண்டும். இக்கோவில் கருவறையில் முருகப்பெருமான், திருத்தணி சிங்கார வேலவன் திருப்பெயர் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராக அழகிய தோற்றத்துடன் நின்ற நிலையில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகப்பெருமான், ஐயப்பன் உட்பட உப தெய்வங்கள் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
 
திருவிழா:
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கிருத்திகை, சஷ்டி  

பிரார்த்தனை:
ஆனந்தம் பெற்றிட, மன அமைதி கிடைக்க, குழந்தைப்பேறு, திருமணப்பேறு வேண்டி, செல்வம் சேர, நினைத்தது நடக்க

நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்.

அருள்மிகு திருத்தணி சிங்கார வேலவன் திருக்கோவில்
அரும்பாக்கம்
சென்னை-600103

இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 8 கிமீ, கோயம்பேடு 5 கிமீ  
மூலவர்: திருத்தணி சிங்கார வேலவன்

தேவியர்: வள்ளி, தெய்வானை

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub