Breaking News :

Friday, March 14
.

நோய்கள் நீங்க எதிரிகள் ஒழிய வாராஹி தேவியை வழிபடுங்க!


விடாது விரட்டும் எதிரிகள் தொல்லை, தீராத கடன் பிரச்னை, தீராத நோய்கள் என பல பிரச்சினைகளில் இன்று ஏராளமானோர் சிக்கித்தவிக் கின்றனர்.

இந்த தொல்லைகள் அனைத்தும் நீங்க ஒரே வழிபாடு உள்ளது. அந்த வழிபாட்டினை நம்பிக்கையோடு செய்தால் எதிரிகள் ஓடி ஒளிவார்கள், விரோதிகள் நண்பர்களாவர், செய்வினை மாந்திரிக தோஷங்கள் அகலும்.

எதிர்பாரா விபத்துக்கள், ஆபத்துகள் ஏற்படாமல் காப்பாள் அன்னை வராஹி. நோய்கள் பரவாமல் இருக்க இரவு நேரத்தில் வராஹி தேவியை வழிபடலாம். தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியவும் நெடுநாள் நோய்கள் குணமாக வராஹியை வழிபடலாம். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பஞ்சமி, அஷ்டமி, தசமி நாட்களில் அன்னையை வழிபடலாம். இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் வீட்டிலேயே வராஹியை நினைத்து வழிபடலாம். சர்க்கரை வள்ளிக் கிழங்கு, எருமைத்தயிர். தேன் கலந்த மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, ஆமை வடை அன்னைக்கு பிடித்தமானது.

நினைத்த காரியம் நிறைவேறும்.

வராஹம் எனப்படுவது பன்றியின் அம்சமாகும் விஷ்ணுவின் அவதாரங்களில் இதுவும் ஒன்றாகும். அன்னை வராஹி பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹி அம்மனுக்கு மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அன்னை வராஹி.

வராஹியை வழிபடுகிறவர்களுக்கு எதிரிகளே இல்லை என்ற நிலை ஏற்படும். ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, நினைத்தது நிறைவேறும்.

அன்னைக்கு பிடித்த நிறம் நீலம், கருப்பு, பவள நிறம், நீல சங்குப் பூக்களும், கருந்துளசி, வில்வமும் அன்னைக்கு ஏற்றது. பௌர்ணமி நாளில் அன்னையின் வலிமை கூடும்.

தொழில், வியாபாரம் செழிக்கும். வராஹி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவியாகவும் விளங்குகிறாள். வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும். இதனால் தன வசியம் ஏற்படும் தொழில் விருத்தியாகும் வியாபாரம் செழிக்கும். பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு வருபவள் வாரஹி எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.
எந்த நாளில் வராஹியை வணங்கலாம்.

ஞாயிறு கிழமைகளில் வாராகியை வழிபட்டால் நோய்கள் தீரும். திங்கட்கிழமைகளில் வழிபட்டால் மன நல பாதிப்புகள் நீங்கும். வீடு நிலம் தொடர்பான பிரச்சினைகள்தீர செவ்வாய்கிழமைகளில் வராகியை வழிபடலாம். கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை வழிபடலாம். குழந்தை பேறு கிடைக்க வியாழக்கிழமை வழிபடலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் வியாழக்கிழமை வழிபடலாம். வெள்ளிக்கிழமை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.

வராஹிதேவிக்கு இஞ்சி பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை நைவேத்தியம் செய்யலாம். நவ தா னிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் பிடித்தமானது. மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, கறுப்பு எள்ளுருண் டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாக படைக்கலாம். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்து படைக்கலாம். குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்கா யும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால் நைவேத்தியம் செய்யலாம்.

'ஓம் ச்யாமளாயை விக்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத்'

இந்த மத்திரத்தை தினந்தோறும் 108 முறை கூறி வணங்கலாம். இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்களை அருள்வாள் அன்னை வராஹி.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.