Breaking News :

Thursday, November 21
.

குழந்தை வரம் அருளும் திருவோத்தூர் (செய்யாறு)


திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தொண்டைமண்டலத் திருத்தலம் திருவோத்தூர்.

திருநாவுக்கரசரால் திருத்தாண்டகம் பாடப்பட்ட திருத்தலம் திருவோத்தூர். (ஆனால், திருநாவுக்கரசரின் திருத்தாண்டகம் கிடைக்கப்பெறவில்லையாயினும், அவரது சேத்திரக் கோவை கிடைக்கப்பெற்றுள்ளது)

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற திருத்தலம் திருவோத்தூர்.

வள்ளலார் இராமலிங்க சுவாமிகளால் பாடப்பெற்ற திருத்தலம் திருவோத்தூர்.

கருணாகரக் கவிராயரால் திருத்தலப் புராணமும் பல்லவபுரம் சோணாசல முதலியாரால் அதற்கு உரையும் எழுதப்பட்ட திருத்தலம் திருவோத்தூர்.

திருத்தல விருட்சமாக விளங்கிய ஆண் பனையைப் பெண் பனையாக மாற்றி திருஞானசம்பந்தர் அற்புதம் நிகழ்த்திய திருத்தலம் திருவோத்தூர்.

விசுவாவசு என்னும் மன்னனை வெல்வதற்கு தனக்கு அருள்புரிய வேண்டும் என்று தன்னை வணங்கி நின்ற தொண்டை நாட்டு மன்னன் தொண்டைமானுக்கு போரில் உதவிட நந்தியம்பெருமானை துணைக்கு அனுப்பிய அற்புதத்தை சிவபெருமான் நிகழ்திய திருத்தலம் திருவோத்தூர்.

அவ்வாறே உறுதுணையாகச் சென்று தொண்டைமானுக்கு போரில் வெற்றியை ஈட்டித் தந்த நந்தியம்பெருமான் அருளும் திருத்தலம் திருவோத்தூர்.
தொண்டைமானுக்கு உதவிடத் தயாராக இருந்ததைக் குறிக்கும் வகையில் இன்றும் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் நந்தியம் பெருமான் அருளும் திருத்தலம் திருவோத்தூர்.

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் சிவபெருமான் வேதத்தை ஓதியருளிய திருத்தலம் வேதபுரம் என்று அழைக்கப்பட்ட திருவோத்தூர்.

திருமால் ஸ்ரீ வேதபுரீஸ்வரரை வணங்கி சக்ராயுதம் பெற்ற திருத்தலம் திருவோத்தூர்.

சூரியன் ஸ்ரீ வேதபுரீஸ்வரை வணங்கி ஒளி பெற்ற திருத்தலம் திருவோத்தூர்.

ஸ்ரீ விநாயகப் பெருமாள் ஸ்ரீ வேதபுரீஸ்வரரை வணங்கி பாச, அங்குசம் பெற்ற திருத்தலம் திருவோத்தூர்.
சந்திரன் ஸ்ரீ வேதபுரீஸ்வரரை வணங்கி நட்சத்திரங்களுக்கு தலைமைப் பதவி பெற்ற திருத்தலம் திருவோத்தூர்.

பிரம்மாவும், இந்திரனும் ஸ்ரீ வேதபுரீஸ்வரரை வணங்கி சாபம் நீங்கப் பெற்ற திருத்தலம் திருவோத்தூர்.

நாக தோஷத்திற்கு பரிகாரத் திருத்தலமாக விளங்குவது திருவோத்தூர்.

சனிக்கிழமை தோறும் திருமணப் பரிகாரத்திற்கான நாகலிங்க அபிஷேகம் நடைபெறும் திருத்தலம் திருவோத்தூர்.

திருஞானசம்பந்தரால் பெண் பனையாக மாறிய பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனம் பழத்தை குழந்தைப் பாக்கியம் வேண்டுவோருக்கு பிரசாதமாக வழங்கும் திருத்தலம் திருவோத்தூர். (ஆடி-ஆவணி மாதங்களில் மட்டுமே பனம் பழம் பிரசாதமாக வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்)

காஞ்சீபுரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், ஆரணியிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள திருத்தலம் திருவோத்தூர்.

குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுண் ஞானசம்பந்தன் சொல்
விரும்ப வார்வினை வீடே - திருஞானசம்பந்தர்

ஓம் நமசிவாய !

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.