நாம் பெருமாளை நோக்கி சேவிக்க நேராகச் செல்லும் போது நாம் செய்த பாவங்கள் எல் லாம் பகவான் கண்ணுக்குத் தெரிகின்றது.
இவனுக்கு என தண்டனை தரலாம் என பக்கத்தில் இருக்கும் ஶ்ரீதேவி நாச்சியாரைப்
பார்த்ததும் உடனே அவள் இந்த ஜீவன் இங்கு வந்து விட்டான், எனவே இவனுக்கு அருள் தான் செய்ய வேண்டும் என வாதாடுகிறாள்.
உடனே பகவான் மறு புறம் திரும்பினால் பொறுமையே வடிவான பூதேவி நாச்சியார்
இந்த ஜீவன் நம் குழந்தை, அவன் தவறே செய்யவில்லை என வாதிட்டு அவன் கோபக் கனலை தணித்து விடுகிறாள் ஆக இரு புறமும் இரு தேவியரும் நமக்கு வேண்டியதை தரச்செய்து விடுகின்றனர்.
ஆனால் திருமலையில் இவர்கள் இருவரும் அருகில் இல்லாத நிலையில் திருவேங்கடவ ன் கோபப் பார்வையை தடுப்பவர் யார்?
அதனால் தான் அகலகில்லேன் என்று அவன் மார்பில் நமக்காக பிராட்டி எப்போதும் விலகாமல் குடிகொண்டு அவன் கோபப் பார் வையை பெரிய திருமண்ணால் மூடி விட்டு
"கோவிந்தா கோவிந்தா" என நாம் அலறும் சப்தம் மட்டுமே அவன் காதில் விழச் செய்து விட்டாள்.
அந்த குறைவில்லாத கோவிந்தனும் நம் அனைத்து குறைகளையும் நீக்குவதற்கே இக்கலி காலம் முடியும் மட்டும் ஏழு மலை மீது, விண்ணவரும் மண்ணவரும் வணங்க நின்றான்.