புதன் என்பது செல்வத்தை அள்ளித்தரக்கூடிய பொன்னான நாள். அந்நாளில்பிரதோஷ வழிபாடு செய்தால் வாழ்வில் செல்வம் பெருகும்.
செல்வம் என்பது பணம் அல்ல, அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என்று 16 வகையான செல்வங்களைப் பெற புதன் கிழமை பிரதோஷ வழிபாடு மிகச் சிறந்தது.
செய்ய வேண்டியவை:
"ஓம் நமசிவாய” எனும் மந்திரத்தை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும்.
புதன் கிழமை காலையில் சிவ ஆலயத்திற்கு செருப்பு போடாமல் சென்று சிவபெருமானையும், நந்தி பகவானையும் வழிபட வேண்டும். கோயிலில் அமர்ந்து 108 முறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை கொடிமரத்திற்கு அருகாமையில் அல்லது தல விருச்சத்திற்கு அருகில் அல்லது நந்தி பகவானுக்கு அருகில் அமர்ந்து உச்சரிக்க வேண்டும்.
மாலை 4 மணிக்கு சிவ ஆலத்திற்கு சென்று நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலை அணிவிக்க வேண்டும் அப்படி செய்தால் தொழில் தடைகள் நீங்கும்.
அன்றைய தினம் கோயிலில் தயிர் சாதம் கொடுத்தால் காரியம் வெற்றிபெறும்.
காமதேனு பசுவுக்கு 4 மஞ்சள் வாழைப்பழம் கொடுக்கலாம்.
ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!