மேற்கு நோக்கிய சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று வாமதேவர் என்ற ரிஷி தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார். கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி. ஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம். இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் வெகு விரைவில் பலன் தந்து கொண்டு இருக்கின்றன. மேற்குப் பார்த்த லிங்கம் உள்ள ஆலயங்கள் தோஷ நிவர்த்தி தலங்களாக விளங்குகிறது.
தேடிப் பிடித்து 41 மேற்கு நோக்கிய சிவ திருத்தல விவரங்களைக் கீழே தந்துள்ளேன். என்குரு திருமூலர் பெருமானின் பேரருளோடு....
(1) அருள்மிகு கபாலீஸ்வரர், திருமயிலை, சென்னை
(2) அருள்மிகு மருந்தீஸ்வரர், திருவான்மியூர், சென்னை
(3) அருள்மிகு இருதயாலீஸ்வரர், திருநின்றவூர், சென்னை
(4) அருள்மிகு பாலேஸ்வரர், பாலேஸ்வரம், செங்கல்பட்டு மாவட்டம்
(5) அருள்மிகு வராஹீஸ்வரர், தாமல், காஞ்சீபுரம் மாவட்டம்
(6) அருள்மிகு திருமேற்றளீஸ்வரர், திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் மாவட்டம்
(7) அருள்மிகு காசி விஸ்வநாதர், கிருஷ்ணசமுத்திரம், திருவள்ளூர் மாவட்டம்
(😎 அருள்மிகு ஜலநாதீஸ்வரர், தக்கோலம், வேலூர் மாவட்டம்
(9) அருள்மிகு வாலீஸ்வரர், குரங்கனில்முட்டம், திருவண்ணாமலை மாவட்டம்
(10) அருள்மிகு அதுல்நாதீஸ்வரர், அரகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம்
(11) அருள்மிகு மருந்தீசர், திருஇடையாறு, விழுப்புரம் மாவட்டம்
(12) அருள்மிகு வீரட்டீஸ்வரர், திருக்கோயிலூர், விழுப்புரம் மாவட்டம்
(13) அருள்மிகு சிஷ்டகுருநாதர், திருத்துறையூர், கடலூர் மாவட்டம்
(14) அருள்மிகு வைத்தியநாதீஸ்வரர், வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்
(15) அருள்மிகு அமிர்கடேஸ்வரர், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்
(16) அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர், செம்பனார்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்
(17) அருள்மிகு கடைமுடிநாதர், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம்
(18) அருள்மிகு தர்மபுரீஸ்வரர், குருகத்தி, நாகப்பட்டினம் மாவட்டம்
(19) அருள்மிகு பார்வதீஸ்வரர், திருத்தெளிச்சேரி, காரைக்கால்
(20) அருள்மிகு மனுநாதேஸ்வரர், மருதவஞ்சேரி, திருவாரூர் மாவட்டம்
(21) அருள்மிகு விஸ்வநாத சுவாமி, தட்டாத்தி மூலை, திருவாரூர் மாவட்டம்
(22) அருள்மிகு கோணேஸ்வரர், குடவாயில், திருவாரூர் மாவட்டம்
(23) அருள்மிகு அபிவிருத்தீஸ்வரர், அபிவிருதீஸ்வரம், திருவாரூர் மாவட்டம்
(24) அருள்மிகு கண்டீஸ்வரர், திருக்கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்
(25) அருள்மிகு இராமலிங்கேஸ்வரர், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்
(26) அருள்மிகு தர்மபுரீஸ்வரர், பழையாறை, தஞ்சாவூர் மாவட்டம்
(27) அருள்மிகு இராமநாதசுவாமி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்
(28) அருள்மிகு உக்தவேதீஸ்வரர், திருத்துருத்தி (குத்தாலம்), தஞ்சாவூர் மாவட்டம்
(29) அருள்மிகு தாயுமானவசாமி, திருச்சிராப்பள்ளி
(30) அருள்மிகு ஜம்புகேஸ்வரர், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
(31) அருள்மிகு கைலாசநாதர், கற்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
(32) அருள்மிகு உய்யகொண்டார், உய்யகொண்டான் திருமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
(33) அருள்மிகு வம்சோத்தாரகர், பெருங்களூர், புதுக்கோட்டை மாவட்டம்
(34) அருள்மிகு காசி விஸ்வநாதர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்
(35) அருள்மிகு மன்னீஸ்வரர், அன்னூர், கோயம்பத்தூர் மாவட்டம்
(36) அருள்மிகு நீலகண்டேஸ்வரர், இருகூர், கோயம்பத்தூர் மாவட்டம்
(37) அருள்மிகு திருமுருகநாதசுவாமி, திருமுருகன்பூண்டி, கோயம்பத்தூர் மாவட்டம்
(38) அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர், ஐயர்மலை, கரூர் மாவட்டம்
(39) அருள்மிகு விஸ்வேஸ்வரன்
பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்டம்
(40) அருள்மிகு கைலாசநாதர்
தாரமங்கலம் சேலம் மாவட்டம்
(41) அருள்மிகு திருக்காளத்தீஸ்வரர், திருக்காளத்தி, ஆந்திரா
திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் "தச வீரட்டான ஸ்தலங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளது சிறப்பம்சம் ஆகும். இந்த பத்து ஸ்தலங்களுள் ஒன்பது ஸ்தலங்கள் திருநெல்வேலி அருகிலும், பத்தாவது ஸ்தலமான திற்பரப்பு மகாதேவர் திருக்கோவில் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகிலும் அமையப்பெற்றுள்ளது.
தச வீரட்டான ஸ்தலங்கள் எனப்படும் மேற்கு திசை நோக்கிய சிவாலயங்கள்:
(1) பக்த ஸ்தலம்: சிவசைலம் அருள்மிகு சிவசைலப்பர் திருக்கோவில்.
(2) மகேச ஸ்தலம்: வழுதூர் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்.
(3) பிராண லிங்க ஸ்தலம்: கோடகநல்லூர் அருள்மிகு
அவிமுக்தீஸ்வரர் திருக்கோவில்.
(4) ஞானலிங்க ஸ்தலம்: சிங்கிகுளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்.
(5) சரண ஸ்தலம்: மேலநத்தம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்.
(6) சகாய ஸ்தலம்: ராஜவல்லிபுரம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்.
(7) பிரசாதி ஸ்தலம்: தென்மலை அருள்மிகு திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோவில்.
(கிரியாலிங்க ஸ்தலம்: அங்கமங்கலம் அருள்மிகு நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோவில்.
(9) சம்பத் ஸ்தலம்: காயல்பட்டினம் அருள்மிகு மெய்கண்டேஸ்வரர் திருக்கோவில்.
(10) பஞ்சாக்ர ஸ்தலம்: திற்பரப்பு அருள்மிகு மகாதேவர் திருக்கோவில்.