Breaking News :

Sunday, December 22
.

9 நவக்கிரகங்களின் தானியங்களும், வழிபாட்டுத் தலங்களும் என்ன?


ஒவ்வொரு கிரகத்துக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு தானியத்தை வகுத்த நமது முன்னோர்கள் அதில் ஆயிரம் அர்த்தங்களுடன் வகுத்துள்ளனர். நவதானியங்கள் என்பது பொதுவாக ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற தானியங்கள் அதாவது சூரியன் உச்சமாக இருக்கக்கூடிய நாளான ஞாயிறு அன்று உடலுக்கு வெப்பத்தினை அளிக்கக்கூடிய கோதுமையை வகுத்துள்ளனர்.

 

1. கிரகம்: சூரியன்* (ஞாயிறு)

ஸ்தலம்: சூரியனார் கோவில் 

நிறம்: சிவப்பு 

தானியம்: கோதுமை 

வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர் 

மலர்: செந்தாமரை 

உலோகம்: தாமிரம் 

நாள்: ஞாயிறு 

ராசிகற்கள்: மாணிக்கம் 

பலன்கள்: காரிய சித்தி. 

 

2. கிரகம்: சந்திரன்* (திங்கள்)

ஸ்தலம்: திங்களூர் 

நிறம்: வெள்ளை 

தானியம்: அரிசி 

வாகனம்: வெள்ளை குதிரை 

மலர்: வெள்ளரளி 

உலோகம்: ஈயம் 

நாள்: திங்கள் 

ராசிகற்கள்: முத்து 

பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.

 

3. கிரகம்: செவ்வாய்* 

ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில் 

நிறம்: சிவப்பு 

தானியம்: துவரை 

வாகனம்: ஆட்டுக்கடா 

மலர்: செண்பகம் 

உலோகம்: செம்பு 

நாள்: செவ்வாய் 

ராசிகற்கள்: பவழம்

பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்.

 

4. கிரகம்: புதன்* 

ஸ்தலம்: திருவென்காடு 

நிறம்: பச்சை 

தானியம்: பச்சைபயிர் 

வாகனம்: குதிரை 

மலர்: வெண்காந்தல் 

உலோகம்: பித்தளை 

நாள்: புதன் 

ராசிகற்கள்: மகரந்தம் 

பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம். 

 

5. கிரகம்: குரு* (வியாழன்)

ஸ்தலம்: ஆலங்குடி 

நிறம்: மஞ்சள் 

தானியம்: கொண்டை கடலை 

வாகனம்: அன்னம் 

மலர்: வெண்முல்லை 

உலோகம்: பொன் 

நாள்: வியாழன் 

ராசிகற்கள்: புஷ்பராகம் 

பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி.

 

6. கிரகம்: சுக்கிரன்* (வெள்ளி)

ஸ்தலம்: கஞ்சனூர் 

நிறம்: வெள்ளை 

தானியம்: மொச்சை 

வாகனம்: கருடன் 

மலர்: வெண்தாமரை 

உலோகம்: வெள்ளி 

நாள்: வெள்ளி 

ராசிகற்கள்: வைரம் 

பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்.

 

7. கிரகம்: சனி* 

ஸ்தலம்: திருநள்ளாறு 

நிறம்: கருப்பு 

தானியம்: எள் 

வாகனம்: காகம் 

மலர்: கருங்குவளை 

உலோகம்: இரும்பு 

நாள்: சனி 

ராசிகற்கள்: நீலம் 

பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்.  

 

8. கிரகம்: ராகு* 

ஸ்தலம்: திருநாகேஸ்வரம் 

நிறம்: கரு நிறம் 

தானியம்: உளுந்து 

வாகனம்: ஆடு 

மலர்: மந்தாரை 

உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல் 

நாள்: ஞாயிறு (அமாவாசை) 

ராசிகற்கள்: கோமேதகம் 

பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்.

 

9. கிரகம்: கேது* 

ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம் 

நிறம்: பல நிறம் 

தானியம்: கொள்ளு 

வாகனம்: சிங்கம் 

மலர்: செவ்வள்ளி 

உலோகம்: கருங்கல் 

நாள்: ஞாயிறு (பெளர்ணமி)

ராசிகற்கள்: வைடூரியம் பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.