யானை முகம், பானை வயிறு கொண்ட பிள்ளையார் கேட்டதை அருளக்கூடியவர். கணபதி, விநாயகர் என பல பெயர் கொண்ட பிள்ளையாரின் திருவுருவத்தை பற்றி
பெருவயிறு :
உலகிலுள்ள எல்லா உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதை குறிப்பிடுகிறது.
ஐங்கரம் :
படைத்தல் தொழிலையும், அழித்தல் தொழிலையும், காத்தல் தொழிலையும், மறைத்தல் தொழிலையும், மற்றொரு கை அருள்புரிவதையும் குறிக்கிறது.
பெரிய காது :
செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
கொம்புகள் :
மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துகிறது.
கண் :
எதையும் உன்னிப்பாக கவனித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
திருவடி :
ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.
தலை :
நல்ல விஷயங்களையே சிந்தியுங்கள். நல்லதையே நினையுங்கள்.
அங்குசம் :
ஆசைகளை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதை அங்குசம் குறிக்கின்றது.
மோதகம் :
வாழ்வை இனிமையாக வாழ வேண்டும். நமது வாழ்க்கை நம் கையில் உள்ளது. அதை இனிமையாக்கிக் கொள்ள வேண் டும் என்பதை மோதகம் உணர்த்துகிறது
விநாயகா போற்றி