தங்க நிறத்தில் மாறும் அதிசய நந்தி – ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்
செங்கம் (வைப்பு தலம்).ஸ்ரீ அனுபாம்பிகை சமேத ரிசபேஸ்வரர் திருக்கோயில்,செங்கம்.
கண்ணை எனும் செங்கம் அருள்மிகு அனுப்பாமிகா ஸமேத ஸ்ரீ ரிஷபேஸ்வரர் ஆலயம் பங்குனி மாதத்தில் நடைபெறும் சூரிய ஒளி பூஜையில் நந்தி பொன்னிறமாக மாறும் காட்சி இன்று 16/11/2021 செவ்வாய்க்கிழமை பிரதோஷம் நாளில் பதிவு செய்துள்ளோம்.
மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர்
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை அருட்டுறை தண் பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும்
#கண்ணை களர் காறை கழிப்பாலையும்
கயிலாய நாதனையே காணலாமே
திருநாவுக்கரசு ஸ்வாமிகள்
திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள செங்கம் என்னும் ஊரில் இக்கோயில் உள்ளது. இவ்வூர், கல்வெட்டில் தென்கண்ணை என்று குறிப்பிடப்பட்டுள்ளது
உள் திருச்சுற்றில் விநாயகர், மகாலட்சுமி, நவக்கிரகம், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
இக்கோயிலில் ஆண்டுக்கொரு முறை பங்குனி 3ஆம் தேதி மாலையில் சூரிய ஒளி கோயில் கோபுரத்தில் விழுந்து சிறிது நேரத்தில் நந்தி மீது விழும். அப்போது சில நிமிடங்கள் நந்தி பொன் நிறத்தில் மின்னுவதைக் காணமுடியும். இதைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்
பங்குனி மாதத்தில் நடைபெறும் சூரிய ஒளி பூஜையில் நந்தி பொன்னிறமாக மாறும் காட்சி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் அமைந்துள்ளது அருள்மிகு ரிஷபேஸ்வரர் கோவில். கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவிலில் ஒரு அற்புதமான நந்தி சிலை உள்ளது. மாதந்தோறும் வரும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் இங்குள்ள நந்தீஸ்வரருக்கு விஷேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கோவிலில் ஒளிந்திருந்த அற்புதமான ரகசியத்தை யாரும் அறியவில்லை. ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு பங்குனி மாதம், 3ம் தேதி எப்போதும் போல நந்தீஸ்வரருக்கு பிரதோஷ பூஜை நடைபெற்றது. அப்போது திடீரென நந்தியின் சில தங்க நிறத்தில் மின்ன ஆரமித்தது.
ஏன் இந்த மாற்றம் என்று கூர்ந்து கவனிக்கையில், வழக்கத்திற்கு மாறாக சூரிய ஒளியானது கோவிலின் ராஜகோபுரத்தை கடந்து நந்தி சிலையின் மீது விழுந்தது. அதனாலேயே நந்தீஸ்வரர் பொன் நிறமாக மின்னுகிறார் என்பது தெரிந்தது. ஆனால் இந்த நிகழ்வு சிறிது நேரம் மட்டுமே நீடித்தது.
இந்த அதிசய நிகழ்வை கண்டு அங்கு கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசம் அடைந்தனர். அதன் பிறகு வருடா வருடம் பங்குனி மாதம், 3ம் தேதி மட்டும் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தி சிலையின் மீது பட்டு சிறிது நேரம் நந்தியின் சிலை பொன்னிறமாக மின்னுகிறது. இந்த நிகழ்வானது பெரும்பாலும் மாலை வேலையில் மட்டுமே நிகழ்கிறது. இந்த அதிசயத்தை காண வருடா வருடம் பக்தர்கள் அங்கு திரண்டு நந்தியின் அருளை பெறுகின்றனர்.
ஸ்ரீ அனுபாம்பிகை சமேத ரிசபேஸ்வரர் திருக்கோயில்,செங்கம்.
கண்ணை எனும் செங்கம் அருள்மிகு அனுப்பாமிகா ஸமேத ஸ்ரீ ரிஷபேஸ்வரர் ஆலயம்
தங்க நிறத்தில் மாறும் அதிசய நந்தி – ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்
மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்களில் பலவிதமான அதிசயங்களும் விஞ்ஞானிகளால் அறியமுடியாத பல அற்புதங்களும் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பொன் நிற வண்ணத்தில் மின்னும் அதிசய நந்தி சிலை இருக்கும் கோவிலை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் இருநூறு ஆண்டுகள் பழமையான அனுபாம்பிகை சமேத ரிஷபேஷ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூலவருடன், தட்சிணாமூர்த்தி, பால முருகன், நவக்கிரகம் மற்றும் கோயில் வளாகத்தில் மிக பெரிய நந்தி உள்ளது. இந்தக் கோயிலின் முன் உள்ள நந்தீஸ்வரர் வருடத்துக்கு ஒருமுறை பங்குனி மாதம் மூன்றாம் நாள் அன்று மட்டும் சில நிமிடங்கள் தங்க நிறமாக மாறும் அதிசய தரிசனத்தை பல லட்சம் மக்கள் தரிசித்து வருகின்றனர். இந்த அதிசய நிகழ்வு முதன்முதலாக கடந்த 2012 ஆம் ஆண்டு பங்குனி மாதம் மாதம் மூன்றாம் தேதி பிரதோஷ வழிபாடு நடந்து கொண்டிருந்தபோது திடீரென சூரிய ஒளி ராஜகோபுரத்தின் மீது பட்டு பிறகு நந்தியின் மீது அந்த சூரிய ஒளி பட்டதும் நந்தீஸ்வரர் தங்க நிறமாக ஒளிந்து காட்சியளித்தார். இந்த அதிசய நிகழ்வுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டு பங்குனி மாதம் மூன்றாம் நாள் பக்தர்கள் செங்கம் ரிஷபேஷ்வரர் கோயிலில் திரண்டு நந்தி பகவானின் அருளைப் பெற்று மகிழ்கின்றனர்.