Breaking News :

Thursday, November 21
.

நோய்களைத் தீர்க்கும் யோகினி ஏகாதசி விரதம் ஏன்?


அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அக ற்றி, மெய்ஞ்ஞானமாய் மிளிர்கின்ற பரம்பொ ருளின் பேரருளை அடைவதற்குத் துணை நிற்பவையே இறை வழிபாடுகள்.

யாகம் வளர்த்தல், பூஜை செய்தல், அபிஷேகம் செய்தல், நைவேத்யம் படைத்தல், கோயிலுக் குச் சென்று வேண்டிக் கொள்ளுதல் என்று பல் வேறு இறைவழிபாட்டுச் சடங்குகள் இருந்தா லும், அதில் முக்கியமானது உண்ணா நோன் பிருந்து இறைவனை வழிபடுவதேயாகும்.

உயிரை இயக்கும் உணவைத் துறந்து கடைப் பிடிக்கும் விரதத்துக்கு எப்போதுமே அதியற்பு தப் பலன்கள் உண்டு. அதனால்தான் மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் இத்தகைய விரதங்களை அனுஷ்டித்து இறை வனை வழிபாடு செய்கிறார்கள்.

மக்கள் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு விரதத்து க்கும் ஒவ்வொரு சிறப்பு இருந்தாலும் அவற்றி ல் முக்கியமானது 'ஏகாதசி விரதம்'. திருமாலி ன் அருளைப் பெறுவதற்கு எளிய வழி ஏகாதசி விரதமிருத்தல். ஆனி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு 'யோகினி ஏகாதசி' என்று பெயர். இந்த விரதமானது உடல் நோயைத் தீர்க்கும் மகத்துவம் நிறைந்தது என்கிறது ‘ஏகாதசி மகாத்மியம்’ என்னும் நூல்.

அக நோய் மட்டுமல்லாமல் உடல் நோயையும் போக்கும் யோகினி ஏகாதசியின் பெருமை யை விளக்கப் பின்வரும் புராண சம்பவம் ஒன்று கூறப்படுகிறது...

புராண சம்பவம்

அழகாபுரியின் மன்னன் குபேரன். இவன் தேவர்களின் கருவூலத்தைக் காப்பவன். தீவிர சிவபக்தன். நாள்தோறும் தவறாமல் சிவபூஜை செய்பவன். குபேரனின் பணியாளன் பெயர் ஹேமமாலி. குபேரன் தினந்தோறும் செய்யும் சிவ பூஜைக்கான மலர்களை மானசரோவர் ஏரிக்குச் சென்று பறித்து வந்து கொடுக்கும் பணியைச் செய்து வந்தான்.

ஒருநாள் வழக்கம்போல குபேரனிடம், `மலர் பறித்துவருகிறேன்' என்று சொல்லிவிட்டு அழகாபுரியிலிருந்து புறப்பட்டான் ஹேமமாலி.

ஆனால், அவன் உரிய நேரத்துக்குத் திரும்ப வில்லை. குபேரனும் மலர்களுக்காக நெடுநே ரம் காத்திருந்தான். மலர் இல்லாததால் குபேரனால் அன்றைய தினத்தில் சிவபூஜை செய்யமுடியவில்லை.

சிவ பூஜை தடைப்பட்டுவிட்டதால் கடுங்கோபம் கொண்ட குபேரன் காவலனை அனுப்பி ஹேம மாலியைத் தேடச் சொல்லி கட்டளையிட்டான். ஹேமமாலியைத் தேடிச்சென்ற காவலன் திரு ம்பி வந்து, ``சிவபூஜை செய்வதற்கு மலர்கள் பறித்துக்கொண்டுவருவதை மறந்து, ஹேம மாலி, அவன் மனைவியுடன் மகிழ்ந்திருக்கிறா ன். அவன் இப்போது திரும்பி வருபவனைப் போல் தெரியவில்லை” என்று தெரிவித்தான்.

குபேரன் கடும் கோபங்கொண்டு, "சிவபூஜை தடைப்படக் காரணமாக இருந்த ஹேமமாலி யைத் தொழுநோய் தாக்கட்டும். அதனால், அவன் மனைவியை விட்டுப் பிரிவானாக...” என்று சாபமிட்டார்.

குபேரன் சாபமிட்ட அடுத்த கணம், தொழுநோ யால் பீடிக்கப்பட்டான் ஹேமமாலி. உடனே அவன் தன் மனைவியைவிட்டுப் பிரிந்து காடு  களில் சுற்றித்திரிய தொடங்கினான். அன்றா ட உணவுக்கும் நீருக்குமே அவன் காடுகளில் அவதிப்பட்டான். நோய் மற்றவருக்கும் பரவிவி டும் என்று பயந்துயாரும் நெருங்கவில்லை.

அவன் துயரம் நீண்டுகொண்டேயிருந்தது. இந்தச் சூழலில்தான் ஒருநாள் வனத்தில் அவன் மார்க்கண்டேய முனிவரை கண்டான்.
தனது நோய் காரணமாக தொலைவிலிருந்தே அவரை வணங்கினான். அனைத்து உயிர்களி டமும் மாறாத அன்பு செலுத்தும் மார்க்கண்டே ய முனிவர் அவன் நிலையைக் கண்டு வருந்தினார்.

"நீ யார்? உனக்கு எவ்வாறு இது நிகழ்ந்தது?" என்று கேட்டார். அதற்கு ஹேமமாலி, எதையும் மறைக்காமல் நடந்ததைக்கூறினான். அதைக் கேட்ட மார்க்கண்டேய முனிவர் "உன் மனைவி யின்மீதுகொண்ட அன்பு தவறில்லை ஆனால்  உன் கடமை தவறியதால்தான் நீ இப்படித் துய ரத்தை அனுபவிக்கிறாய். நோய்களால் ஏற்படும் துன்பங்களைப் போக்கும் விரதம் ஒன்று உ ண்டு அதை நான் உனக்கு உபதேசிக்கிறேன்" என்றார்.

உடனே ஹேமமாலியும் , "என் மீது கருணை கொண்டு நீங்கள் உபதேசிக்கும் விரதத்தை நிச்சயம் பின்பற்றுவேன்" என்று சொன்னான். முனிவரும் ஹேமமாலிக்கு ' யோகினி ஏகாதசி ' விரதத்தின் மகிமையை எடுத்துச் சொல்லி அதைக் கடைப்பிடிக்குமாறு உபதேசித்தார்.

முனிவரின் வாக்கைத் தெய்வவாக்காக நம்பிய ஹேமமாலி, யோகினி ஏகாதசி நாளில் விரதமிருந்து தன் நோய் நீங்கப் பெற்றான். தன் அழகிய தோற்றத்தையும் திரும்பப் பெற்றான். மீண்டும் அழகாபுரிக்குச் சென்று தன் மனைவியுடன் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தான்.

நம்பிக்கையுடன் விரதமிருந்து, திருமாலை வழிபட்டால் பாவச் சுமைகளிலிருந்து விடுபடு வது மட்டுமல்லாமல், நோய்களிலிருந்தும் விடுபடலாம் என்பதையே ஹேமமாலியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

யோகினி ஏகாதசி அன்று நாள் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி மகாவிஷ்ணு வை வழிபட அனைத்து நற்பலன்களையும் அடைவதோடு தீராத நோய்களிலிருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்புகளையுடைய யோகினி ஏகாதசி 02.07.2024 வருகிறது.

தவறாமல் இந்த விரதத்தைக் கடைப்பிடித்துப் பயன்பெறவும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.