விதவைக்கும் உணர்வுகள் உண்டு.
விவாகரத்து அல்லது
வேறு காரணத்தால் விதவை ஆன ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு மாத்திரம்,
எவரும் முன் வருவது இல்லை !
அவள் கன்னிப் பெண் கிடையாது ,
அழகு இல்லை ,
அவளுக்கு வயதாகி விட்டது ,
அவளுக்கு பிள்ளைகள் உண்டு ,
என்று இப்படி எத்தனையோ ?
காரணங்களை தாராலமா
பட்டியல் போட்டு ஒதுக்கி வாழாவெட்டியாகவே வைத்துக் கொள்ளத் தெரிந்த சமூகத்தில் ;
பலருக்கு , அவளை குறுக்கு வழியில் அடைந்து கொள்வதற்கு (விபச்சாரம்) முயல்வதும் ,
அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்பதும் , அதில் அவளது வயதோ ,
பிள்ளைகளோ ,
ஏனைய குறைகளோ ,
விளங்காமல் போவதும்தான் கேவலம்!!
அவர்களை (அந்த பெண்களை )
வாழா வெட்டியாக ஒதுக்கி வைப்பதோ ;
அவர்களை விபச்சாரத்தின் பக்கம் அழைக்க நினைப்பதோ எந்த ( ) கிடையாது..!!
விதவை என்பவள் விபச்சாரி கிடையாது ,
விதவையும் பெண் தான்!
அவளுக்கு மார்பு மட்டும் அல்ல ;
அதனுள்ளே
நொந்து போன மனசும் உண்டு !
விதவைக்கும் உணர்வுகள் உண்டு.
முடிந்தால் அவளுக்கு கௌரவமான விதத்தில் வாழ்வு கொடுங்கள்!!
அல்லது அவள் கௌரவமாக வாழ்வதற்கு உதவி செய்யுங்கள் !
இல்லையேல் ,
ஓரமாக ஒதுங்கி நடையைக்கட்டி கொண்டே இருங்கள்!
காரணம்........
அவர்களுக்கும் மனசு உண்டு
மானமும் உண்டு!!
நடைபிணமாக வாழும்
(அப்படிபட்ட பெண்களை ) மதியுங்கள் !
வெறும் சதையை பார்க்காதிர்கள் !
சிதைந்த போன அவளின் வாழ்வை மீண்டும் சீரழிக்காதீர்கள்...!!