எனக்கு தெரிந்த வரையில் முதலில் நினைவுக்கு வருவது சீதை தான். அயோத்தி மக்களுக்கு சீதையின் கற்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ராமருக்கு ஏற்பட்டது.அதனால் சீதையை தீக்குளிக்க சொன்னார். ஆனால் , அக்னியானது சீதையை நெருங்கவில்லை , அக்னி தேவன் சீதையை வணங்கி விடைபெற்றார். சீதையின் பதிவிரதம் அந்தளவுக்கு உயர்ந்தது. சீதை இரண்டாவது வனவாசம் முடிந்து நாட்டுக்குள் வரும்போதும் மக்களின் சந்தேகம் தீரவில்லை.இம்முறை இராமர் எதுவும் கூறவில்லை. சீதா தேவி தன் வடிவங்களில் ஒன்றான பூமிக்குள் சென்று விட்டார்.
பிரகலாதனை ஒரு முறை அவனது தந்தை நெருப்பில் வைத்து எரிக்க உத்தரவிட்டான். ஆனால் , அக்னிதேவன் அப்போதும் பிரகலாதனை நெருங்க வில்லை. நெருப்பிலிருந்து உயிருடன் வெளிவநதான் பிரகலாதன். சரபங்க முனிவர் ஆசிரமத்திற்கு ஒருமுறை இராமர் வந்திருந்தார் .அப்போது சரபங்க முனிவர் பெரிய தீ வளர்த்து அதனுள் நுழைந்து இளமையான உருவத்துடன் வெளியே வந்தார்.