இக்கதையானது திரு கி.வா.ஜகந்நாதன் அவர்களால் எழுதப்பட்டது. தொகுப்பின் பெயர் அதிசயப் பெண். இந்த தொகுப்பினில் பல குறுங்கதைகளை உள்ளடக்கியுள்ளன.
இப்போது அதிசியப் பெண் என்ற குறுங்கதையைப் பார்ப்போம். வித்தியாதரர் என்ற அறிவாளிக்கு வித்தியாவதி என்ற அழகிய பெண் இருந்தாள். அவளைப் போல் உலகில் இரண்டு மூன்று நபர்கள் தான் உண்டு, அவ்வளவு அழகு. ஊரில் உள்ள ஆண் பிள்ளைகள் வித்தியாவதியை திருமணம் முடிக்கப் போட்டிப்போட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவளின் தந்தையோ ஒரு அறிவுள்ள அழகிய தேகம் கொண்ட ஆண் மகனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து. தன் மகளைப் பற்றி வருகின்ற ஆண்மகனிடம் அவளது அழகை நம்பாதே; அவளது சுபாவத்தைச் சொல்கிறேன் கேள் என்று கூறினார்.
அப்படித்தான் ஒருவன் வந்து வித்தியாதரரிடம் உங்கள் பெண்ணை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றான். உடனே வித்தியாதரர், இதைக் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வா? என்றார். வந்தவன் என்ன சொல்லுங்கள் என்றான். அவள் கல்லைப்போட்டுச் சமைப்பாள் . சாப்பிட்டால் ஆதார வஸ்துவை வெளியில் எறிந்துவிடுவாள் என்றார். வந்தவன் இவள் ஒரு அதிசயப்பெண் நமக்கு உபயோகப்படமாட்டாள் என்று எண்ணி வந்த இடம் தெரியாமல் திரும்பிவிட்டான்.
சில நாட்கள் தொடர்ந்து மற்றும் ஒருவன் வித்தியவதியின் தந்தையிடம் அவளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து வந்தான், அவனிடம் மேலே கூறிய மாதிரி இரண்டையும் சொல்லி, மேலும் ஒன்றைக்கூறினார். அதாவது வேகாத இலையையும், வெட்டின காயையும் வெந்த கல்லையும் கலந்து கொண்டுவந்து வைப்பாள் என்றார். வந்தவன் என்ன ஒரு அதிசயப் பெண் என்று நினைத்து ஓடிவிட்டான்.
சில மாதங்கள் கழிந்தன, வித்தியாவதியின் தந்தையிடம் ஒருவன் வந்து உங்கள் பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றான். உடனே அவர் மேலே கூறியவற்றையெல்லாம் கூறிவிட்டு மேலும் ஒன்றைக் கூறினார். வேகாத கட்டைக் குழம்பை ஊற்றுவாள். வந்தவன் கேட்டுவிட்டு மௌனமாகச் சென்றுவிட்டான்.
நல்ல ஆண் பிள்ளையைத் தேடிப் பிடித்து தன் பெண்ணுக்குத் திருமணம் முடிக்கவேண்டும் என்ற ஒரே நினைப்பில் அவர் செயல்பட்டார். ஒரு நாள் நல்ல அழகான வாலிபன்,
வித்தியாவதியின் தந்தையிடம் வந்து பேச முற்பட்டான். அவனது அணுகுமுறை கவனித்த வித்தியாதரர் அவனிடம் பேச முற்பட்டார். வந்தவனும் அவனது எண்ணத்தை வெளிப்படுத்தினான், அதாவது வித்தியாவதியை திருமணம் செய்யத் தயார் என்று கூறினான். இடனே அவர் வழக்கம்போல் மேலே கூறிய அனைத்தையும் கூறி மற்றும் ஒன்றை அவனிடத்தில் கூறினார் . இரண்டு மாட்டின் மேல் படுத்துத் தூங்குவாள் என்று கூறினார்.
வந்தவன் என்ன இது பெற்ற பிள்ளையைப் பற்றி அவளது தந்தையே இப்படி யாராவது கூறுவார்களா? இங்கு ஏதோ ஒரு மர்மம் புதைந்திருக்கிறது, என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்து அவரிடம் அவள் எப்படி இருந்தாலும் சரி அவளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பதிலளித்தான். உடனே பெண்ணின் தந்தை அவனது பொருமையையும் மற்றும் அவனது உடல் அமைப்பையும் பார்த்த பிறகு அவன் வித்தியாவதிக்கு தகுதியானவன் என்று முடிவெடுத்து திருமணம் செய்து வைத்தார்.
வித்தியாவதி தன் கணவனுடன் தனது திருமண வாழ்வைத்தொடங்கினால்.
ஒரு நாள் தன் கணவனிடம் என் தந்தை எண்ணை பற்றிக் கூறிய பிறகு எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என்றால்? கல்லைப் போட்டுச் சமைப்பேன் என்றார் அல்லவா! என்றால். உடனே அவளது கணவன் ஆம் நீ உப்புக் கல்லைப்போட்டுத் தான் சமைப்பாய் அல்லவா என்றான். அவள் ஆதார வஸ்துவை வெளியில் எறிந்துவிடுவது சரியா? அவன் ஆம் சமைத்த உணவு பண்டத்தை வாழை இலையில் வைத்துச் சாப்பிடுவது வழக்கம். சாப்பிட்ட பின் அதனை எடுத்து வெளியில் எறிந்துவிடுவது வழக்கம் அல்லவா! இதில் ஆதார வஸ்து (வாழை இலைதான்) என்றான்.
அவள் உடனே தன் கணவனிடம் வேகாத இலையையும், வெட்டின காயையும் வெந்த கல்லையும் கலந்து கொண்டுவந்து வைப்பாள் என்றாரே? இதற்கு என்ன பொருள் என்றால்.
வேகாத இலை (வெற்றிலை) வெட்டின காய் (பாக்கு) வெந்த கல் (சுண்ணாம்பு) என்றான்.
கடைசியாக இரண்டுமாட்டின் மீது. தூங்குவேன் என்று சொன்னாரே அதற்கு என்ன பதில்? என்றால். நானே தலைமாட்டினிலும், கால்மாட்டினிலும் தூங்குகிறேன். ஏன் நீ தூங்கக் கூடாது என்றான். அதற்கு அவள் எனது தந்தை எல்லாரையும் ஏமாற்றிவிட்டார், ஆனால் உங்களை ஏமாற்ற முடியவில்லை என்று சொல்லிச் சிரித்தாள் என்று கதையை முடித்திருப்பார் திரு கி.வா.ஜகந்நாதன் அவர்கள்.
-பாலமுருகன்.லோ