Breaking News :

Wednesday, January 15
.

அரைஞாண் கயிறு கட்டுவது ஏன்?


பெண்கள் காலில் கொலுசு அணிவது, மெட்டி அணிவது போன்றவற்றிக்கு பின்பு எப்படி அறிவியல் ஒளிந்துள்ளதோ அதுபோல தான் ஆண்கள் அரைஞாண் கயிறு அணிவதற்கு பின்பும் அறிவியல் ஒளிந்துள்ளது.

 பொதுவாக பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு குடல் இறக்க நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் ஹெரணியா என்று அழைப்பர். ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவதன் மூலம் இந்த நோயை வராமல் தடுக்க முடியும்.

 உடல் எடை அதிகரிப்பதனால் ஆண்களுக்கு இந்த குடல் இறக்க நோய் ஏற்படும் என்று கூறப்படுகிறது. நம் முன்னோர்கள் காலத்திலும் இந்த நோய் இருந்திருக்க கூடும். அதனாலேயே அரைஞாண் கயிறு கட்டும் படி அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 ஆரம்பகாலத்தில் கருப்பு நிறத்திலேயே அரைஞாண் கயிறு கட்டப்பட்டது. ஆனால் கால மாற்றம் மற்றும் அவரவர் வசதிக்கு ஏற்ப இப்போது வெள்ளி மற்றும் தங்கத்தாலும் அரைஞாண் கயிறு கட்டப்படுகிறது.

 ஞாண் என்றால் கயிறு என்று பொருள். உடம்பின் சரிபாதியை குறிக்கும் பகுதி இடுப்பு. அரை உடலை குறிக்கும் இடுப்பு பகுதியில் கட்டுவதால் இதற்க்கு அரைஞாண் கயிறு என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

 நமது நவீன அறிவியலுக்கு எட்டியவரை அரைஞாண் கயிறு குடல் இறக்க நோயை தடுப்பதற்காகதான் கட்டப்படுகிறது என்றாலும் கூட அதையும் தாண்டி வேறு சில காரணங்களும் அதில் நிச்சயம் ஒளிந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.