Breaking News :

Wednesday, January 15
.

கணவன் மனைவியின் கோபம் குடும்பத்தை?


ஒரு கணவனும் மனைவியும் ஒரு சிறிய பிரச்சினையில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு பிரிகின்றனர். பிரிந்த கொஞ்ச நாட்களில் மனைவி கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் தனது கணவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள்.

1வது கடிதம்; "நான் உங்களிடம் ஒரு நல்ல செய்தி சொல்லவேண்டும் சீக்கிரம்  வீட்டிற்கு வாருங்கள்?" என்று எழுதினாள்... மனைவியின் மீது கோபம் தீராதவன்... அந்த கடிதத்தை படிக்காமலே அதை கிழித்து வீசிவிடுகிறான்.

6 மாத காலம் ஓடிய நிலையில் மறுபடியும் தன் கணவனுக்கு அவள் கடிதம் எழுத ஆரம்பித்தாள்.

2வது கடிதம்; நான் கர்ப்பமாக இருக்கிறேன் உங்களை காண ஆவலாக இருக்கிறது சீக்கிரம் வீட்டிற்கு வாருங்கள்" என்று எழுதி அனுப்பினாள்... இந்த முறையும் அசாதாரணமாக ஏதோ ஒரு யோசனையில் பிறகு படிக்கலாம் என அத்தோடு அதை மறந்துவிடுகிறான்.

வாரங்கள் பல செல்ல திடீரென ஏதோ ஒரு ஞான உதயம் அவனுக்குள் வந்து தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து வீட்டிற்கு செல்ல புறப்படுகிறான்.

அப்போதுதான் அவன் மனைவியின் மூன்றாவது கடிதம் வந்தது... ஆவலுடன் அதை பிரித்து படிக்க ஆரம்பித்தான்.

3வது கடிதம்;  யார் மீது என்ன தவறு என்றே தெரியவில்லை எதற்காக நாம் சண்டை போட்டோம் என்பதே ஞாபகத்தில் இல்லை, நீ இல்லாத இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை நமக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறான் என் மீது கோபம் என்றாலும் உன் குழந்தையை காண வந்திருக்கலாம், வாழ்க்கையை வெறுத்துவிட்டேன்,  இன்று இரவுக்குள் நீ வீட்டிற்கு வரவில்லை என்றால் நாங்கள் இவ்வுலகத்தை விட்டு பிரிந்திடுவோம்!"

என்று எழுதி இருந்ததை படித்தவன் முகமெல்லாம் வேர்த்து நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன் என எண்ணி காற்றை விட வேகமாக வீட்டிற்கு ஓடினான் இவன் வருவதற்குள் அங்கே வீடு தீப்பற்றி எறிந்தது.

இவன் திரும்பி வந்து எந்த பலனுமின்றி தாயும் குழந்தையும் தீயில் கருகி இறந்தனர். மிகுந்த குற்ற உணர்ச்சியில் தாங்க முடியாத துயரத்தில் இவனும் அவர்களுடன் நெருப்போடு நெருப்பாய் எறிந்து சாபலாய் போனான். ஒரு சிறிய கோபத்தால் ஒரு அழகான குடும்பமே அழிந்து போனது..

ஆண்களின் கோபம் குடும்பத்தை கெடுக்கும்.
பெண்களின் கோபம் குலத்தையே அழிக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.