Breaking News :

Monday, December 30
.

நாய்களை அடித்து கொடுமை செய்வது பாவமில்லையா..?


தயவு செய்து படிங்க..!

இன்னிக்கு காலையில கடைத்தெருவிற்கு சென்றேன். அங்கு கடைக்கு எதிரில் ஒரு குப்பைத்தொட்டியில் ஒரு நாய் ஒன்று உணவு தேடிக்கொண்டு இருந்தது  


அங்கு பக்கத்தில் விளையாடிகிட்டு இருந்த சிறுவர்கள் அதை பார்த்ததும் கல்லை எடுத்து எடுத்து அந்த நாயை அடித்தனர் 
அந்த கல் அந்த நாயின் காலில் பலமாக பட்டு நாயின் காலில் இரத்தம் சொட்ட சொட்ட ஓட முயன்ற அந்த நாய் வலியிலும் குப்பையில் கிடந்த எதோ ஒரு உணவு பொட்டலத்தை வாயில் கவ்விக்கொண்டு நொன்டிக்கொண்டே ஓடியது 
அந்த சிறுவர்களிடம் இப்படியெல்லாம் செய்யாதீர்கள் நாயும் நம்மை போன்ற உயிர் தானே அதை அடித்து கொடுமை செய்வது  பாவமில்லையா..?  என்று கூறிவிட்டு ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு எனது வண்டியை எடுத்துக்கொண்டு நாய் சென்ற வழியில் அதனை பின் தொடர்ந்து சென்றேன் சிறிது தூரம் சென்றதும் அந்த நாய் ஒரு புதரின் அருகில் நிற்பதை பார்த்தேன் அதை பார்த்ததும் என் மனம் கலங்கியது  அங்கு ஐந்து நாய் குட்டிகள் இருந்தது அந்த நாயின் குட்டிகள் என நினைக்கிறேன் அது கவ்விக்கொண்டு வந்த உணவு பொட்டலத்தை குட்டிகள் சாப்பிட்டு கொண்டிருந்தன அந்த நாயின் தாய்மை பாசத்தை நினைத்து கண்கள் கலங்கியது  நான் கொண்டுவந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து அந்த நாயின் அருகில் சென்றேன்  வலியில் அந்த நாயின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்ததும் என் மனம் வருந்தியது அதோட கண்ணை பாருங்க உங்களுக்கு புரியும் அதோட வலி 
அதுவும் ஒரு உயிருள்ள ஜீவன் தானே, அதற்கு நம்மால் உதவ முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இதை போன்று மனிதாபிமானமற்ற முறையில் அதனை தாக்காமல் இருங்கள் இது ஏதோ சிறுவர்கள் செய்த தவறு தான் ஆனாலும் சில பெரியவர்களும் மெத்த படித்தவர்களுமே இப்படி செய்கின்றனர் அது தவறு என்பதை இனிமேலாவது தயவு செய்து உணருங்கள்  உங்களால் முடிந்தால் உங்கள் தெருவில் உள்ள நாய்களுக்கு உங்களால் முடிந்த உணவையோ அல்லது ஒரு பாக்கெட் பிஸ்கட் அல்லது உங்கள் வீட்டில் மீதமிருந்த பழைய சோற்றை போடுங்கள் அதன் அன்பையும் நன்றியுணர்வையும் பிறகு பாருங்கள் அது உங்கள் வீட்டை உள்ளன்போடு பாதுகாத்து என்றும் உங்களுக்கு நன்றியுடன் இருக்கும்

நாய்களுக்கு போட்டி பொறாமையில்லை, 
சூழ்ச்சி தெரியாது, வஞ்சகம் தெரியாது, 
துரோகம் அற்றது,
மொத்தத்தில் மனிதர்களைவிட பன்மடங்கு அவை சிறந்தது.   

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.