உங்கள் திருமணவாழ்க்கையே புரட்டி போடக்கூடிய தன்மை நீங்கள் உங்கள் வாழ்க்கைத்துணையோடு பேசக்கூடாத சில விஷயங்களை பற்றி நித்தம் பேசுவது தான். அந்த பேச கூடாத 5 விஷயங்களை பற்றி பார்த்து விடலாமா?
மத நம்பிக்கை பற்றி பேசுதல்:
உங்கள் வாழ்க்கைத்துணை வேற்று மதத்தை சேர்ந்தவர் என்றால், மதத்தை பற்றி நீங்கள் வாயையே திறக்க கூடாது. உங்கள் மதத்தை போற்றியும், உங்கள் வாழ்க்கைத்துணையின் மதத்தை இழிவு படுத்தியும் நீங்கள் பேசினால், இந்த தவறு உங்கள் திருமணத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடும். உங்கள் துணை மதநம்பிக்கையைப் பற்றி கருத்து கூறுவது, உங்கள் இருவர் இடையே பலவித முரண்பாடுகளுக்கும், வாக்குவாதங்களுக்கும் வழிவகுக்கலாம்.
தோற்றத்தை பற்றிய விமர்சனம்
உங்கள் வாழ்க்கைத்துணையின் தோற்றத்தை பற்றி நீங்கள் விமர்ச்சித்தால், அதை அவர் ஏற்று கொள்ள மாட்டார். இதில் வேதனைக்குறிய விஷயம் என்னவென்றால், உங்கள் வாழ்க்கைத்துணையின் தோற்றத்தை சிலாகித்து பேச உங்களுக்கு தோன்றாது. அவருடைய தோற்றத்தை அவர் மனம் நோகும் படி தான் உங்களுக்கு பேச தோன்றும். இந்த தவறு உங்கள் வாழ்க்கைத்துணையின் தன்னம்பிக்கையை குறைக்கும் என்பதனால் அதை நீங்கள் அவசியம் தவிர்க்க வேண்டும்.
உங்கள் துணையின் குடும்பத்தை பற்றிய விமர்சனம்:
உங்கள் வாழ்க்கைதுணையின் பெற்றோர்கள் அல்லது குடும்பத்தை பற்றிய விமர்சனத்தை தவிர்ப்பது மிகவும் அவசியம். உங்கள் குடும்பத்தை பற்றி விமர்சித்தால் எந்த அளவிற்கு உங்களுக்கு பிடிக்காதோ, அது தான் உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மற்றவர்களுடன் ஒப்பீடு செய்தல்:
உங்கள் வாழ்க்கைதுணையை, மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது அவர்களைப் மனதளவில் மிகவும் பாதிக்கும். உங்களை யாருடனாவது ஒப்பீடு செய்தால், எந்த அளவிற்கு உங்களுக்கு கோபம் வருமோ, அதே அளவிற்கு உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் உங்களுடைய ஒப்பீடு கோபத்தை உண்டாகும். ஒவ்வொருவரும் ஒவவொரு தனித்துவம் கொண்டவர்கள் என்பதால், ஒப்பீடுகளை நீங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
கடந்தகாலத்தை நினைவு கூருதல்:
உங்கள் வாழ்க்கைத்துணையின் கடந்த கால தவறுகளை நீங்கள் நினைவு படுத்தி கொண்டே இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கை கசப்பாக மாறி விடும். உங்கள் வாழ்க்கைத்துணையின் கடந்தகாலத்தை பற்றி திரும்ப திரும்ப பேசுவதை தவிர்ப்பது தான் உங்களுக்கு நல்லது.
உங்கள் வாழ்க்கைத்துணை மேல் உங்களுக்கு சகல உரிமை இருக்கிறது, அதனால் எதை வேண்டுமானாலும் பேசலாம், அதை அவர் சகித்து கொள்ளவேண்டும் என்று கனவிலும் நினைக்காதீர்கள். ஏன் என்றால், உங்கள் தேவையற்ற பேச்சுகளை சகித்து கொள்ள வேண்டிய அவசியமோ நிர்பந்தமோ அவருக்கு கிடையாது.