என்னுடைய சுற்றத்தில் இன்னும் காதல் திருமணங்கள் நடைபெறுவதில்லை . 99.9% நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தான் . அதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பற்றி மட்டுமே எழுதுகிறேன் .
சுத்தமான வியாபாரம் . இரண்டு பக்கமும் சொத்துக்கள் மற்றும் ஆணின் பக்கம் நல்ல வேலை , சரிசமமாக குடும்பப்பின்னணி இருந்தால் போதும் . இப்போ வெளித்தோற்றமும் சேர்ந்து உள்ளது .( எங்க பக்கம் வரதட்சணை இல்ல)
கல்யாணம் முடிந்து வேலைக்காக ஏதாவது பெருநகரங்ளுக்கு போய்விட்டால் பரவாயில்லை . இல்லையெனில் சுயமாக வாழ்வது கடினம் .,hyper realistic expectations , தொடர் மதிப்பீடுகள் . பெண் நாடகத்தில் வரும் கதாநாயகியாக வலம் வரனும் . ஆணுக்கு பெண் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏகப்பட்ட காலாவதியான அட்வைஸ் வரும் .
வாழ்க்கைத்துணை அமைவது game with pure luck. Gambling மாதிரி தான் . நான் நிறைய வெற்றிகரமான திருமணங்களை பார்க்கிறேன் , ஆனால் மகிழ்ச்சியான திருமண உறவுகள் அரிது . நம் ஊரில் சேர்ந்து இருந்தா போதும் ,சந்தோசமாக இருப்பது தேவையில்லை .
திருமணம் என்பது இரண்டு தனித்தனி மனிதர்கள் சேர்ந்து அவர்கள் வாழ்க்கையை நடத்துவது . நம் ஊரில் இரண்டு குடும்பங்கள் சேர்வது னு பெருமை பேசி பலபேர் கைபட்ட பண்டமாக பாழாகி விடுகிறது.
ஆங்கிலத்தில் breadcrumbing னு ஒரு வார்த்தை உண்டு . அத்தியாவசியமானதை விட்டுவிட்டு மீதி அத்தனையும் கவனிப்பது . Love is the last thing . காதல் என்பது இந்திய சமுதாயத்தில் திருமண உறவிற்கு மிக கடைசியாக அதுவும் optional ஆக சேர்க்கும் விசயம் .
நிறைய பொய் . இது திருமணம் பேச ஆரம்பித்தது முதல் வாழ்க்கை முடியும் வரை . பிடிக்காத உறவினரை விழுந்து விழுந்து கவனிப்பதில் தொடங்கி .. பற்பல .
பிரச்சினையை சரிசெய்ய திருமணத்தை ஒரு தீர்வாக பார்ப்பது . திருமணம் என்பது இரண்டு பேர் வாழத்தான், திருத்தி மறுவாழ்வு தரும் மையம் அல்ல னு புரிவதில்லை . திருமணம் திருத்தாவிட்டால் அடுத்த மருந்து குழந்தை .
குழந்தை வந்துவிட்டால் அம்மா , அப்பா தான்.. கணவன் மனைவியாக வாழ முடியாது , கூடாது , வாழ நினைத்தால் பெருங்குற்றம்.
ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு இருவரும் குடும்ப நிறுவனம் நடத்துவது தான் . Household -Economy- Society நிதி ஆணின் துறை . மற்ற இரண்டும் பெண்ணின் துறை . தற்கால தம்பதி மூன்றையும் இரண்டு பேரும் சேர்ந்து நிர்வகிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தீராத தேவைகள் , ஆசைகள் நடுத்தர வர்க்கம் தீர்க்க நிற்காமல் ஓட , frustration and disappointments .
பொதிசுமைக்கும் மாடுகள் இரண்டும் ஒரே போல் ஒன்றோடு ஒன்று புரிந்து இழுத்தால் நலம் . இல்லையெனில் குறுக்கடி பாய்ந்த மாட்டால் நல்ல மாடும் சேர்ந்து அடிவாங்கும் . வேலையும் ஓடாது . நல்ல மாட்டுக்கும் கதை கந்தல்.