Breaking News :

Sunday, February 23
.

விளக்கை அணைத்தால் எல்லாருமே?


திருமணம் என்பது வெறும் உடலுறவு என்னும் ஒன்றிற்காக செய்யும் ஒரு சம்பிரதாயம் இல்லை. அடுத்த தலமுறையை உலகிற்கு பரிசளித்து வாழ்க்கை நெறிகளையும், முறைகளையும், அறத்தையும் கற்றுக்கொடுத்து அதை இனி வரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தும் அற்புதமான செயல்.
அதற்கு எதற்கு அழகு தேவை?

விளக்கை அணைத்தால் எல்லாருமே உலக அழகிகள் தான். உலக அழகன்கள் தான்.
கலவி மட்டும் திருமணம் என்று நினைத்து விட்டீர்களா?

இரவில் இருபது நிமிடத்தில் முடித்துவிட்டு கிளம்பும் ஒரு செயலுக்கு பெயர் திருமணம் என்ற எண்ணம் கொண்டிருந்தால், மன்னிக்கவும் அது இல்லை. அதை காசு கொடுத்து செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.

ரொம்ப valuable விசயம் ரொம்ப சீப்பா கிடைக்குது. ஆம். Sex is free nowadays. ஆமா அப்படி தான் இருக்கு இன்று நிலமை. வருந்ததக்க விசயம்.

அது ஒரு பந்தம். பூமிக்கு மனித இனத்தை கொடையாக அளிக்கும் ஓர் புனித உடன்படிக்கைக்கு கீழான உறவு. சும்மா ஒன்னும் முன்னோர்கள் சொல்லவில்லை திருமணம் என்பது ஒரு ஆயிரங்காலத்து பயிர் என்று.

அவளின் உடையை களைவதில் காண்பித்த ஆர்வத்தை, முடித்த பின் அதே உடையை அவளுக்கு அணிவித்து விடுவதிலும் காண்பிக்க வேண்டும். அது தான் காதல். அந்த காதலை வெளிப்படுத்தும் ஒரு உறவிற்கு பெயர் தான் திருமணம். இதற்கு அழகு தேவை இல்லை. தேவையே இல்லை.
உங்களுக்கு 80 வயதாகும் போது உங்கள் துணைக்கு 75 வயதாவது ஆகும்.

கண்ணம் சுருங்கிவிடும். பல்லுனு ஒன்னு இருக்கவே இருக்காது. பேரப்பிள்ளைகள் ஆளுக்கொரு மூலையில் மொபைல் போனில் உரையாடிக் கொண்டிருப்பார்கள். அருகில் இருக்கும் நீங்கள் உயிரற்ற பொருளாக கூட கணக்கிடப்பட மாட்டீர்கள். ரேசன் கார்ட் மகன் பெயரில் இருக்கும். அதில் உங்கள் பெயர் இருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

இன்னைக்கு வாய் நிறைய அரசியல் பேசும் உங்களை, அகவை 80ல் ஓட்டு போட அழைத்து செல்லுதல் ஒரு சுமை அதுக்கு ஆட்டோ பிடிச்சி பூத்துக்கு தூக்கிட்டு போயிட்டு அய்யயய்யோ... வொரி பிடித்த வேலை என்றெண்ணி ஒருவரும் அழைத்துச் செல்ல மாட்டார்கள்.

குடும்பம் மொத்தம் ஓட்டு போட சென்றிருந்த வேலையில் ஒருத்தி நரைத்த முடியுடன் கண்ணங்கள் சுருங்க, என்னங்க, விடுங்க நம்ம புள்ளைங்க தான? நல்லா இருந்துட்டு போகட்டும். மனசுல எதையும் வச்சிக்காதீங்க. இந்தாங்க இந்த சுகர் மாத்திரையை சாப்பிடுங்க என்று சொம்பில் தண்ணீருடன் நீட்டுவாள் பாருங்க.

அவளுக்கு பெயர் தான் மனைவி.  படுக்கையில் இருந்தாலும், ராசாத்தி ராசாத்தி என்று கடைசி மூச்சிலும் அவளை மட்டுமே தேடுவானே அந்த உறவிற்கு பெயர் தான் கணவன்.

அம்மா இறந்த பிறகு ஜிமிக்கி எனக்கு, தாலி செயின் உனக்கு. அண்டா எனக்கு குண்டா உனக்கு என்று பங்கு வைத்துக் கொள்ளும் சம்பிரதாயங்கள் நடைக்கையில், ஒரு காய்ச்சல் தலை வலிக்கும் உட்காராத மனுஷன் ஒரு மூலையில் உட்கார்ந்து என்னை விட்டுட்டு போயிட்டியேம்மா இனி யாருமா இருக்கா எனக்கு என்று தலை மீது கை வைத்து உலகத்தையே மறந்து, என்னையும் உன் கூடயே கூட்டிட்டு போயிருக்க கூடாதா தாயி, இனி இந்த உசுரு இருந்தா என்ன செத்தால் என்ன? என்று தன்னையும் அறியாமல் வாழ்க்கையில் முதல் முதல் கண்ணீர் வடிப்பானே அது தான் காதல்.
வீட்டுக்கு வந்ததும் அவளை தான் தேடும் அவன் கண்கள்.

பிறந்தகத்திற்கு அவள் பெற்றோரை பார்த்துவிட்டு வர அவளை அனுப்பிவிட்டு பத்து முறையேனும் பஸ் ஸாண்டிற்கு சென்று மாமனார் ஊரிலிருந்து வரும் பேருந்து எப்பொழுது வரும் என்று விடியலுக்காக காத்திருப்பானே அது காதல்.

வீட்டில் அம்மா இல்லை என்று குழந்தைகள் தேடவில்லை என்றாலும், அம்மாவுக்கு ஒரு போனை போடு, எங்க வந்துட்டு இருக்கானு கேட்போம் என்று இருபது முறையேனும் போன் செய்து பேசிவிட்டு, இரண்டு நிமிடம் கழித்து இருபத்தி ஓராவது முறை போன் செய்ய சொல்லுகையில், ப்பா அம்மா வருவாப்பா, ஏன்ப்பா காலில் சுடு தண்ணி ஊத்திகிட்டு நிக்கிற என்று குழந்தைகளே திட்டும் அளவிற்கு ஒருவன் குழந்தைத்தனமாக நடந்து கொள்வானே அகவை 50ல் அதற்கு பெயர் காதல்.
அந்த தேடல் இருக்கு பாருங்க அது மற்ற எந்த உறவிலும் இவ்வளவு இருக்காது.

எப்படா மனைவி அவங்க அம்மா வீட்டுக்குப் போவா நண்பர்களுடன் சுற்றுலா செல்லலாம் என்று சுயநலமாக யோசிக்காது அந்த காதல்.

பக்கத்து தெரு ராமசாமி அண்ணேன் ஹாஸ்பிடலில் இருந்து டிஜ்சார் ஆகி இன்னைக்கு தான் வீட்டுக்கு வந்துருக்காங்களாம், வா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வருவோம் என்று எங்கே சென்றாலும் அவளை இழுத்துச் செல்லும் பாருங்க அது தான் அந்த பந்தத்தின் மகிமையே.

அழகும் வீண். சௌந்தரியமும் வீண். எல்லாம் முப்பது முப்பத்தைந்து வருசம் தான். அப்புறம் அவளுக்கு நரைத்த முடி எட்டிப் பார்க்கும், உங்களுக்கு முடியே இருக்குமா இருக்காதா என்பது சந்தேகம் தான்.

மனைவி என்பவள் வாழ்க்கை துணைவியானவள் தவிர, கண்ணுக்கு காட்சி பொருள் இல்லை.
இதை உணர்ந்து கொண்டால் போதும். யாரை திருமணம் செய்தாலும் அவர்களை அழகாக பார்க்க முடியும்.

புற அழகு தான் அழகு என்று நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியை கழற்றி வைத்து விட்டுப் பாருங்கள். உலகம் மொத்தமும் அழகாக தெரியும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.