15 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த
ஜீவசமாதி.
முஞ்சிகேசர் இந்த பெயரை உங்களில் சிலர் கேள்விப்பட்டுலாம்.
சென்னை காளிகாம்பாள் கோவில் அருகே இருக்கும் கச்சாலீஸ்வரர் எனும் பழமையான கோவிலில் முஞ்சிகேச முனிவருக்கு சந்நிதி இருக்கிறது.
அதேபோல் தமிழ்நாட்டில் சுமார் 10,15 பழமையான சிவன் கோவில்களில் முஞ்சிகேச முனிவருக்கு சந்நிதி உண்டு. பஞ்ச சபைகளில் மூத்த சபையாக விளங்கும் திருவாலங்காடு ரத்தின சபை சிவன் கோவில் அருகே இவரது ஜீவசமாதி தனி கோவிலாக இருக்கிறது.
யார்? இந்த முஞ்சிகேசமுனிவர்.
சிவனின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒருநாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்கி விடுகிறான்.
அதனால் சிவனின் சாபத்தை கார்கோடகன் பெற்றான். தனது தவறை பின்னர் உணர்ந்து வருந்தி, திருந்திய கார்கோடகன் ஈசனிடம் மன்னிப்பு கேட்க அந்த சாபத்திற்கு பிராயச்சித்தமாக பூமிக்கு சென்று பல சிவ ஷேத்ரங்களை வழிபட சொல்லி கார்கோடகனுக்கு சிவன் கட்டளை இட்டார்.
அவ்வாறு பல ஷேத்ரங்களை வழிபட்ட பின்னர் நிறைவாக திருவாலங்காட்டில் என்னை நோக்கி தவமிருக்கும் சுனந்த முனிவர் எனும் மகா முனிவரை நீ பணிந்து வணங்க வேண்டும். அவரின் ஆசியும், கடைக்கண் பார்வையும் உன் மீது பட்ட அந்த நொடியில் உன் சாபம் நீங்கும் அந்த நொடியே நான் அங்கு தோன்றுவேன் என்று சிவபெருமான் சொல்ல அதன் படி கார்கோடகன் கார்கோடக முனிவராக இந்த பூமிக்கு வந்து பல சிவ ஷேத்ரங்களை வழிபடுகிறார்.
கார்கோடகன் வழிபட்ட இடம் தான் கோடன் பாக்கம் ஆகி அது பின்னர் கோடம்பாக்கமாக மாறியது.
கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி பின்னர் வடபழனி ஆனது. கோடம்பாக்கத்தில் இருக்கும் வேங்கீஸ்வரம் கோவில் கார்கோடக முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் முதலான பல முனிவர்களால் வழிபடப்பட்ட ரொம்ப பழமையான கோவில்.
நிறைவாக திருவாலங்காடு வந்த கார்கோடகனுக்கு சுனந்த முனிவரின் ஆசி கிடைத்து அதனால் கார்கோடகனின் சாபம் நீங்கியது. சுனந்த முனிவர் சரி இந்த முஞ்சிகேச முனிவர் யார்?
சுனந்த முனிவர் கடுந்தவம் செய்து அதனால் அவரின் தலைமீது முஞ்சிபுல் எனப்படும் ஒருவகை புல் படர்ந்து, வளர்ந்தது.
இதன் காரணமாக தான் அவர் முஞ்சிகேசர் எனும் பெயர் பெற்றார். கேசம் என்றால் தலை. 20 ம் நூற்றாண்டில் கூட ரமணமகரிஷி போன்ற மகான்கள் உடலில் புற்று மண் மூடும் அளவு தவம் செய்து ஈசனின் தரிசனத்தை பெற்று இருக்கிறார்கள்.
அன்று சிவனுக்கும், காளிக்கும் நடந்த நடன போட்டியை நேரடியாக இருந்து பார்த்தவர் முஞ்சிகேச முனிவர்.
விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த பொழுது அவருக்கு நடந்த உபநயன சடங்கில் முஞ்சிகேச முனிவர் கலந்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.
கார்கோடகனுக்கு ஏற்பட்ட சாபத்தையே போக்கிய அந்த முஞ்சிகேச முனிவர் எத்தகைய ஒரு தபஸ்வியாக, ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டும்.
கம்பீரமாக திருவாலங்காட்டில் முஞ்சிகேச முனிவர் வீற்று இருக்கிறார்.
சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் தான் திருவாலங்காடு இருக்கு.ராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முஞ்சிகேச முனிவரின் ஜீவசமாதிக்கு நல்லெண்ணெய்யை சிறிது காணிக்கையாக கொடுத்து அங்கே சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்யுங்கள். நிச்சயமாக உங்களின் ராகு, கேது தோஷம் சரியாகும்.
இவரின் ஜீவசமாதி தோராயமாக 15 ஆயிரம் ஆண்டுகள் என்று அறியப்படுகிறது.