Breaking News :

Friday, October 25
.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு பழமொழி?


குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி, அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கௌரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.

அப்போது கர்ணன், தனது தாய் குந்திதேவியிடம் "தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கௌரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.

ஆகவே, ஆறிலும் சாவுதான்,  
இல்லாவிட்டால் நூறிலும் சாவுதான்.

அதற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய எனது நண்பன் துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன்" என்கிறான்.

இவ்வாறு கர்ணன் கூறியதுதான் இந்த பழமொழிக்கு உண்மையான
பொருள்.

இத்தகைய கர்ணனைத்தான் கொடைத் தன்மைக்கு மட்டுமல்லாது
நல்ல நட்பிற்கும் எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறோம்!

ஆறிலும் சாவு நூறிலும் சாவு..

ஆன்மீக வாழ்க்கைக்கு புராணங்கள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி, அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்..!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.