பனை மரங்களை ஒரு காலத்தில் நெல்லை தூத்துக்குடி சிவகங்கை, ராமநாதபுரம், பட்டுகோட்டை, பரமக்குடி போன்ற பகுதிகளில் அதிகம் பார்க்கலாம். ஆனால் தற்ப்போது இதனுடைய எண்ணிக்கை குறைய தொடங்கி வருகிறது. அதிகம் பயன் தரக்கூடிய தமிழர்களின் பாரம்பரியமான நமது பனை மரத்தை வளர்க்க இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். கிராமங்களில் இருக்கும் இளைஞர்களே!
உங்கள் பகுதியில் நீங்களே பனை மரங்களை நடலாம். ஒரு விடுமுறை நாளை தேர்வு செய்து இளைஞர்கள் ஒன்றிணைந்து முயற்சி செய்தால் இது சாத்தியமே. பனை மரம் வறட்சியை தாங்கி வளரக் கூடியது.
பயிர் செய்யும் முறை
40 வயதுள்ள மரத்தில் இருந்து பனம்பழம் நெற்றாகி விழுவதற்கு முன்பே(அடிபடாமல் பாதுகாக்க) பறித்து. பழத்தை கோணி சாக்கால் 5 நாள் பழங்களை மூட வேண்டும்( நார் சத்து விரைவாக அழுகுவதற்கு) பின்பு வெய்யிலில் நன்கு உலர்த்த வேண்டும்.
ஒரு பனம் பழத்தில் ஒன்றில் இருந்து மூன்று விதை இருக்கும். சிலர் பேச்சு வாக்கில் சொல்வார்கள் ஒரு விதை பழம்( பெண் மரத்தையம்), இரு விதைப்பழம் ( ஒரு பெண், ஆண் மரத்தையும்), மூன்று விதை பழம் (இரண்டு ஆண், ஒரு பெண் மரத்தையும்) உருவாக்கும்.
இதை மனதில் கொண்டு நாற்று விடுவது நன்று. குறைந்தது 10 பெண் மரத்திற்க்கு 1 ஆண் மரம் நடவும். அதற்கு தகுந்தார் போல் பயிர் செய்யவும். நிளமான கொட்டை துரிதமாக முளைக்கும்.
பால் கலந்த நீரில் 24 மணி நேரம் ஊறவைத்து மணற் பரப்பில் பனங் கொட்டை கூம்பிய பகுதி கிழே 5 சென்டி மீட்டர் ஆழத்தில் நடவு செய்யலாம்.
நேரடியாக மரத்திர்கு மரம் 10 அடி இடை வெளியில் 1 அடி நிள, அகல, ஆழ குழி எடுத்து மக்கிய எரு போட்டு நடவு செய்யலாம். பனம் கிழங்கு 100-130 நாளில் அறுவடை செய்யலாம் அடர் நடவு முறை போதுமானது. ஒரு மாதத்தில் முளைப்பு வரும்.
பனை மரம் பயன்கள்:
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் #நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.பனை மரங்கள் நிலத்தடி நீரைச் சேமிப்பதில் மிகச் சிறந்து விளங்குகின்றன.
பனங்கற்கண்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன்படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம், தாகம் போன்றவை நீங்கும்.
பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றுக்கும் நோய் தீர்க்கும் குணங்கள் உண்டு.பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும். அதை தடிப்பு, சொறி உள்ளவர்கள் அதன் மீது தடவி வர குணமடையும்.
ஐந்து அல்லது ஆறு முறை தடவ வேண்டும்.பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும்.கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.
பனை மரம்
இழந்ததை மீட்போம்
இருப்பதை காப்போம்
புதியதை உருவாக்குவோம்