பிரெஞ்சு நாட்டவர், ஆங்கிலேயர்கள் எனப் புதிய புதிய தலைமைகளின் கீழ் வண்ணமயமான கலாச்சாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்த இடம் தூத்துக்குடி. தூத்துக்குடியில் சமையற்கட்டை குசினி என்பார்கள், குசினி ஒரு போர்த்துக்கீசியச் சொல். அலமாரி, ஜன்னல், மேசை, மேஸ்திரி, சாவி, வராந்தா, பீப்பாய், அன்னாசி என்று இன்று தமிழ் மொழியாகவே மாறிவிட்ட இந்த வார்த்தைகள் அனைத்தும் போர்த்துக்கீசிய மொழியின் வார்த்தைகளே. இந்தப் போர்த்துக்கீசிய வார்த்தைகள் தமிழ் மொழிக்குள் தூத்துக்குடி வழியாகவே நுழைந்தன.
போர்த்துசீயர்கள் தங்களுக்காக செய்யத் தொடங்கிய ரொட்டிக்கு மாவு உள்ளிட்டவற்றை தங்கள் நாட்டிலிருந்து வரவழைத்தனர், ரொட்டி நம்மவர்களுக்கு ஒத்துவரவில்லை என்பதால் அதே மாவை நம்மவர்கள் பிசைந்து சுட்டதில் தான் நம்ம பரோட்டா பிறந்தது.
தூத்துக்குடி ஏன் பரோட்டாவின் தலைநகரமாகக் கருதப்படுகிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவு சந்தைக்கு வந்தது. விலை மலிவாக இருந்த மைதாவில் செய்யப்பட்ட பரோட்டாக்கள் எளிய மக்களின் உணவாக மாறியது. சாதா பரோட்டா தவிர்த்து இந்த ஊரில் இருந்து தான் எண்ணெயில் பொறித்த #பரோட்டா என்கிற புதிய ரகம் கிளம்பியது.
நன்றி: அ.முத்துக்கிருஷ்ணன்