Breaking News :

Monday, April 21
.

போகி பண்டிகை ஏன்? எதற்கு? எப்படி?


போகி பண்டிகை அன்றுஅதோடு வீட்டில் இருக்கும் நெய், தயிர், உப்பு போன்ற பொருட்களை கடனாக கொடுத்து விடாதீர்கள்.

 

 போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வீடுகளை சுத்தம் செய்து சமையல் அறையில் அரிசி மாவினால் கோலம் போட்டு அலங்கரித்து  அரிசி, பருப்பு, புளி, மிளகாய், சர்க்கரை ஆகியவைகளை சிறுசிறு கிண்ணங்களில் போட்டு வைத்து சிறிய விளக்கேற்றி வைக்க வேண்டும். 

 

 அது அணையாத விளக்காக இருந்தால் கூடுதல் சிறப்பு. 

 

 மறந்தும் கூட இந்த நாளில் வீட்டை அசுத்தமாக வைத்து விடாதீர்கள்.  

 

  அதோடு வீட்டில் இருக்கும் நெய், தயிர், உப்பு போன்ற பொருட்களை கடனாக கொடுத்து விடாதீர்கள். 

 

போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் இந்திரன். பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திரன் கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல்,   இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார்.  இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது.  

 

, தேவர்களின் அரசன் மற்றும் மழையின் கடவுளான இந்திர பகவானுக்காக தான் பாரம்பரியமாக போகி பண்டிகையை கொண்டாடி வருகிறோம்

போகிப்பண்டிகை நாளில் ஆவாரம்பூ, சிறுபீளை, வேப்பிலை, தும்பை, பிரண்டை, மாவிலை வைத்து காப்பு கட்டி அதை நோயில் இருந்து காக்கும் முதலுதவிப் பெட்டியாக கட்டி வைத்துள்ளனர்.

 

 போகியன்று அழகுபடுத்தப்படும் வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். போகி கொண்டாடப்பட உள்ள நாளில் புராண கதைகளையும், காப்பு கட்டுவதன் தத்துவத்தையும் அறிந்து கொள்வோம். போகி நாளில் மறந்தும் கூட சில தவறுகளை செய்து விடக்கூடாது. தெரியாமல் செய்யும் தவறு கூட மகாலட்சுமிக்கு கோபத்தை ஏற்படுத்தி விடுமாம். 

 

போகி பண்டிகையை கொண்டாடுவதால் இன்பம் மற்றும் போகம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்திர பகவான் மட்டுமல்லாது சுக்கிர பகவானும் போகத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். சுக போக வாழ்க்கையை பெறுவதற்கு சுக்கிர பகவானின் அருள் நமக்கு தேவை. சுக்கிரன் பார்வை வலுவாக இருக்கும் பொழுது ஒருவர் பணக்காரராக முடியும் என்று நம்பப்படுகிறது. இதனால் தான் போகி பாண்டியை முதன்மையானதாக கருதுகின்றனர். 

 

 இதுதான் ரொம்ப முக்கியம் பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகையில் இருந்து தான் இத்திருநாள் தொடங்குகிறது. போகி பண்டிகையை எதற்காக கொண்டாடுகிறோம் என்று கேட்டால், 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்று குறிப்பிடுவோம். அதாவது வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு எரித்து புதியவற்றை கொண்டு இனி வரும் நாட்களை நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று குறிப்பிடுவார்கள். ஆனால், உண்மையில் போகி பண்டிகை என்றால் நமது மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள், அழுக்கு, தீய குணங்கள் போன்றவற்றை முற்றிலுமாக நீக்கி, புதிய நல்ல எண்ணங்களை கொண்டு வர வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இதை உணர்த்தும் வகையில் தான் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரித்து வருகிறோம். தீய எண்ணங்களை எரிப்பதற்கு இது சமமாகும் என்று நம்பப்படுகிறது. தற்போது பெருகி வரும் காற்று மாசுவின் காரணத்தால் பழைய பொருட்களை எரித்து போகியை கொண்டாடுவது சரியானது அல்ல. எனவே இதற்கு மாறாக தீய எண்ணங்களை மட்டும் நமது மனதில் இருந்து நீக்கி இறைவனை வழிபடலாம். குறிப்பாக போகியை கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இந்திர பகவான் தான். 

 

 ஆம், தேவர்களின் அரசன் மற்றும் மழையின் கடவுளான இந்திர பகவானுக்காக தான் பாரம்பரியமாக போகி பண்டிகையை கொண்டாடி வருகிறோம். நம் முன்னோர்கள் போகிப்பண்டிகை நாளில் ஆவாரம்பூ, சிறுபீளை, வேப்பிலை, தும்பை, பிரண்டை, மாவிலை வைத்து காப்பு கட்டி அதை நோயில் இருந்து காக்கும் முதலுதவிப் பெட்டியாக கட்டி வைத்துள்ளனர்.

 

 தமிழ் ஆண்டின் ஒன்பதாவது மாதமான மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது இன்று  போகி கொண்டாடப் படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படும் இந்தப்பண்டிகை 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகி நாளில் வீடுகளில் உள்ள தேவையற்ற குப்பைகளை எரித்து, வீடுகளுக்கு வண்ணம் பூசி, மூலிகைகள், மாவிலைத் தோரணத்துடன் காப்பு கட்டி தை மகளை வரவேற்பது தமிழர் மரபு. 

 

இந்த நன்நாளில், தங்களில் வீட்டின் முற்றத்தில் மக்கள் பாரம்பரிய முறையில் கோலங்களை அரிசி மாவு பயன்படுத்தி போடுவது வழக்கம். அடுத்தாக, விவசாயிகள் தங்கள் உபகரணங்களை வணங்குவார்கள். மேலும் இந்திரனை வணங்கி இந்த வருடம் நல்ல விளைச்சலை தர வேண்டும் என்று வணங்கி மகிழ்வார்கள்.

 

 போகி பண்டிகைக்கும் தேவர்களின் தலைவன் இந்திரன் மற்றும் கிருஷ்ணா பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தேவர்களின் தலைவனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். குழந்தை கிருஷ்ணருக்கு இது தெரிய வந்தவுடன், இந்திர தேவனுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார். 

 

கிருஷ்ணன் தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார். அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார். 

 

இந்திரன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். 3 நாட்களுக்கு நீடித்தது அந்த மழை. அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திரன். பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திரன் கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல், இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார். இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது. 

 

இதைஓட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும். போகி நாளில் விளக்கேற்றும் முன்பாக காப்புகட்டுகின்றனர். விடிய விடிய விளக்கேற்றி கடவுளை வரவேற்கின்றனர். காப்புக் கட்டு என்பது மூலிகைகள் அடங்கிய முதலுதவி பெட்டி. விஷக்கடி, அலர்ஜி, வயிற்றுப்போக்கு போன்ற சிறு சிறு பிரச்னைகளுக்குத் தேவையான மூலிகைகள் வீட்டில் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த காப்பினை கட்டுகின்றன. காப்புக் கட்டும் போது அதில் ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை போன்ற மூலிகைகள் அடங்கியிருக்கும். காலப்போக்கில் பிரண்டை, தும்பை போன்ற மூலிகைகளை விட்டு தற்போது ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை வைத்து கட்டுகின்றனர். 

 

வேப்பிலை சிறந்த கிருமிநாசினி. காற்றில் பரவும் கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் வேப்பிலை தோரணம் கட்டுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் காப்புக் கட்டு சடங்கு மூலமாக வீட்டிலும் வேப்பிலையை வைத்திருக்கச் செய்தார்கள் முன்னோர்கள். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கும் இந்த மூலிகை, ஆண்டு முழுவதும் கிடைக்கும் என்றாலும், மார்கழி மாதப் பனியில் செழிப்பாக வளர்ந்திருக்கும். சிறுநீர் கல்லை உடைக்கும் அபாரமான சக்தி படைத்தது இந்த மூலிகை. நீர்க்கடுப்பு, சிறுநீர் கல் போன்ற பிரச்னைகளுக்காகவே இதனையும் காப்புக் கட்டு என்ற பெயரில் வீட்டில் வைத்திருந்தனர் முன்னோர்கள். உடல் சூட்டைத் தடுக்கும் அற்புதமான மூலிகை ஆவாரை. ஆவாரம் பூ இதழ்களை, நிழலில் உலர்த்தி, பொடி செய்து, கஷாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும்.

 

 போகி பண்டிகை 

கொண்டாடப்பட உள்ள நிலையில் வீடுகளை சுத்தம் செய்து சமையல் அறையில் அரிசி மாவினால் கோலம் போட்டு அலங்கரித்து அரிசி, பருப்பு, புளி, மிளகாய், சர்க்கரை ஆகியவைகளை சிறுசிறு கிண்ணங்களில் போட்டு வைத்து சிறிய விளக்கேற்றி வைக்க வேண்டும். அது அணையாத விளக்காக இருந்தால் கூடுதல் சிறப்பு. மறந்தும் கூட இந்த நாளில் வீட்டை அசுத்தமாக வைத்து விடாதீர்கள். அதோடு வீட்டில் இருக்கும் நெய், தயிர், உப்பு போன்ற பொருட்களை கடனாக கொடுத்து விடாதீர்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.