நம் மொத்த மக்கள் தொகைக்கும் ஒரு சிறிய அளவிலான ஆண்கள் தான் ஒரு காலத்தில் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?
தன் குரோமோசாம்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது என்பது தான் ஒவ்வொரு உயிரின் நோக்கம். இந்த ஒரே ஒரு நோக்கத்திற்காக தான் ஒரு செல் உயிரியில் இருந்து ஆறறிவு மனிதன் வரை வாழ்கிறான், பிழைக்கிறான், இறக்கிறான்.
கிட்டத்தட்ட அனைத்து பெண்களுக்கும் அடுத்த தலைமுறைக்கு குரோமோசோம்களை கடத்த வாய்ப்பு கிடைத்த நிலையிலா ஆண்களிலோ இந்த வாய்ப்பு வெகு சிலருக்கு மட்டுமே கிடைத்தது. அதாவது 17 ஆண்களில் 1 ஆணுக்கு மட்டும் தான் பெண்களுடன் உடலுறவு கொண்டு தன் குரோமோசோமை கடத்தினார்கள். மிச்சம் 16 ஆண்கள் என்ன ஆனார்கள் என்றால் பெண்களுடன் உடலுறவு கொண்டு தன் குரோமோசோம்களை கடத்த வாய்ப்பின்றி அவர்கள் சந்ததி அவர்களோடு மடிந்து போனது.
7000 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்வை Y குரோமோசாம் பாட்டில்நெக் என அழைக்கிறார்கள். Melissa A. Wilson Sayres என்பவர் 2014ல் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் இதை தெரிவித்துள்ளார்.
7000 ஆண்டுகளுக்கு முன் நடந்த மகாபாரத போரினால் ஆண்கள் மிகப்பெரும்பாலோனோர் இறந்து போக மிச்சம் இருந்த சிறு அளவிலான ஆண்களால் தான் சந்ததி பெருக்கம் நடைபெற்றது என சிலர் உருட்டினாலும் 7000 ஆண்டுகளுக்கு முன் உருவான கலாச்சார மாற்றமே இதற்கு காரணம் என தன் கட்டுரையில் தெரிவிக்கிறார்.
7000 ஆண்டுகளுக்கு முன் தான் மக்கள் வேட்டை சமூகத்தில் இருந்து விவசாய சமூகமாக மாறி நாடோடி வாழ்க்கையில் இருந்து மாறி ஓரிடத்தில் வாழ ஆரம்பித்த போது ஆண்களில் படிநிலைகள் உருவாகி அதிகாரம் மிக்க சில ஆண்களே பிற ஆண்களுக்கு வாய்ப்பளிக்காமல் அனைத்து பெண்களையும் புணர்ந்து குழந்தை பெற்றுள்ளனர். இதன் எச்சம் தான் அரசர்களுக்கு மட்டும் எண்ணிக்கையில் அடங்கா மனைவிகள், துணைவிகள், இணைவிகள். காசும் அதிகாரமும் இருப்பவர்கள் இன்றும் கூட மனைவி, இணைவி, துணைவி என சமூகத்தில் இருப்பதை காண்கிறோம்.
நல்ல வேளையாக நாகரிகமடைந்து திருமணம், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கான்செப்ட்டை எல்லாம் கொண்டு வந்ததின் பலன் தான் அனைத்து ஆண்களுக்கும் தன் குரோமோசோமை கடத்தும் வாய்ப்பு கிட்டியது. இல்லை எனில் அதிகார பலம் மிக்க ஒரு சில ஆண்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிட்டியிருக்கும்.
நன்றி: Kuzhali