“குழந்தை பெத்துக்க வாடகை தாய் வேணுமாம், ஆனா அந்த குழந்தைய பிசிகல் காண்டேக்ட் வச்சி பெத்து கொடுக்கணுமாம், என்ன அநியாயம் இது? இப்படி ஒரு கண்டிஷனுக்கு நீ எப்படி அக்சப்ட் பண்ண" என்று இண்டர்வ்யூக்கு வந்த ஒருத்தி ஆதங்கத்தோடு பனிமலரை பார்த்து கேட்டுகொண்டிருந்தாள்.
வாடகை தாயாக குழந்தை பெற்று கொடுக்கும் வேலை என்று தெரிந்து தான் அவளும் வந்திருந்தாள், ஆனால் உள்ளே வந்த பிறகு தான் அவர்கள் கொடுத்த கண்டிஷன் பேப்பரை பார்த்து ஷாக் ஆகி இப்படி கத்தி கொண்டிருக்கிறாள், அவள் மட்டுமல்ல அங்கு வந்த பலரும் இதே கோபத்தில் தான் கொதித்து போய் கத்தி கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு நடுவில் அமைதியே உருவாக உட்கார்ந்து கொண்டிருந்தாள் பனிமலர்.
“ஹெலோ என்ன நீங்க இப்படி எல்லாத்துக்கும் சம்மதம்ங்கற மாதிரி உட்கார்ந்திருக்கீங்க, நாங்கல்லாம் இந்த கண்டிஷன்ச படிச்சி பார்த்து கொதிச்சி போய் இருக்கோம், நீங்க என்னனா இவ்ளோ கேசுவலா இருக்கீங்க, எழுந்திரிங்க முதல்ல, இங்க இருந்து போய்டலாம்” என்று பனியை பார்த்து ஒருத்தி ஆதங்கத்தோடு பேசினாள்.
அதே நேரம் பனிமலரை இண்டர்வ்யூ எடுக்க உள்ளே இருந்து அழைப்பு வந்தது, அவ்வளவு நேரம் அத்தனை பேரும் பேசியதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாதவள் மாதிரி அவள் பெயரை அழைத்த அடுத்த நொடி இண்டர்வ்யூ நடக்கும் அறைக்குள் சென்றாள் பனிமலர். உள்ளே வந்தவளை சூர்யவன்ஷியின் கண்கள் ஆராய்ச்சி பார்வை பார்த்தது.
“எல்லா கண்டிஷனையும் படிச்சிட்டிங்களா, உங்களுக்கு சம்மதம் தானே” என்று கணீர் குரலில் அவன் கேட்டான்.
“எஸ், எனக்கு எல்லாத்துக்கும் சம்மதம்”
அவள் கூறிய பதிலில் அவனே ஒரு நொடி திகைத்து போய் பின் இயல்பு நிலைக்கு வந்தான்.
“இங்க வந்த பலர் இந்த கண்டிஷன பார்த்துட்டு பயந்து போய் ஓடிட்டாங்க, ஆனா நீங்க மட்டும் ஏன் இதுக்கு ஓகே சொல்றீங்க… ரீசன் பணம் தான, பணத்துக்காக தான ஓகே சொல்றீங்க”
அவன் கேள்வியில் அவள் கண்கள் அவனை வேதனையோடு பார்த்தது. விரத்தியோடு புன்னகைத்தாள்.
“இல்ல சார், பணத்துக்காக இல்ல, நிம்மதிக்காக.. என்கிட்ட இல்லாதது அது தான்”
அவள் கூறியதை அவன் நம்பவில்லை. இப்படிப்பட்ட ஒரு வேலைக்கு ஒரு பெண் சம்மதிக்கிறாள் என்றால் அதற்கு காரணம் பணம் இல்லாமல் வேறு என்ன இருந்து விட போகிறது என்று அவன் உறுதியாக நம்பினான்.
“எது வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும், பட் என்னோட முக்கியமான கண்டிஷன நான் அகைன் உங்களுக்கு புரியற மாதிரி சொல்றேன், இது சரகேசி மதர்கான இண்டர்வ்யூ தான், ஆனா எனக்கு செயற்கை கருத்தரித்தல் மூலமா குழந்தை பெத்துக்க விருப்பம் இல்ல, சோ ஐ வான்ட் நேச்சுரல் பேபி. அதாவது பிசிக்கல் கனெக்ஷன் மூலமா தான் குழந்தை பெத்துக்கணும், நான் கூப்டற டைம் என்னோட வந்து பிசிக்கல் கனெக்சன் வச்சிகணும், நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியுது தானே” என்று அழுத்தமாக கேட்டான்.
அவளோ எந்த பதிலும் சொல்லாமல் அமர்ந்திருக்க அவன் அவளை எரிச்சலோடு பார்த்தான்.
“உங்களுக்கு இன்ட்ரெஸ்ட் இல்லைனா வெளிய போறீங்களா, என் டைம வேஸ்ட் பண்ணாதிங்க”
அவன் கூறியதும் அடுத்த வினாடி “எனக்கு சம்மதம்” என்று அவசர குரலில் கூறினாள்.
எதற்காக பனிமலர் இந்த கண்டிஷனுக்கு சம்மதிக்கிறாள்?
சூர்யவன்ஷி இப்படி ஒரு வழியில் குழந்தை பெற்று கொள்ள எதற்காக விரும்புகிறான்?
இதனால் வர போகும் விபரீதம் என்ன?
கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து பிரதிலிபியில் ‘பனியில் நனைந்த சூரியன்’ கதையை தொடர்ந்து படிங்க, இந்த கேள்விகளுக்கான பதிலை தெரிஞ்சிக்கோங்க.
https://tamil.pratilipi.com/read/பனியில்-நனைந்த-சூரியன்-1-பனியில்-நனைந்த-சூரியன்-1