கணவனின் நண்பன் மட்டுமல்ல, பெண்கள் கணவனின் குறைகளை அல்லது நிறைகள் அல்லது அந்தரங்கம் எதுவுமே ஆண்களிடம் ஆலோசனை அல்லது கருத்து கேட்க கூடாது.
ஆனால் பெண்கள் அப்படியில்லை. உதாரணமாக, ஒரு கணவன்மனைவியின் தோழியிடம், மனைவி சந்தோஷம் தரவில்லை என்று சொல்லுவது தவறு என்றாலும், அதனால் பின் விளைவுகள் ஒன்றும் கிடையாது. சொல்லப்போனால், அந்த தோழி, நல்ல சிநேகிதியாக இருந்தால், அவள் பல நல்ல உபதேசம் சொல்லி, அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க, சந்தோஷம் ஏற்பட தன்னால் ஆன எல்லா முயற்சியும் செய்வாள்!
ஆனால், ஒரு ஆண் முதலில், அந்த பெண்ணின் நிலைமையை தனக்கு சாதகமாக ஆக்கி கொள்ள வாய்ப்புண்டு! அந்த பெண், "என் கணவர் என்னிடம் அன்பாக நடந்து கொள்வதில்லை!" என்று சொன்னால், ஆண்கள் என்ன பேச வேண்டும்?
உண்மை பேச வேண்டும்! எது உண்மை?
இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நான் கூட என் மனைவியிடம் பெரிய அன்பெல்லாம் காட்டியதில்லை. ஆனால் அதற்காக அவள் என்னை விட்டு வேறு ஒருவருடன் செல்ல மாட்டாள், என்று சொல்லவேண்டும். பெண்கள் மீது தவறு இருந்தாலும், அவள் தவறை பொய் சொல்லி மறைக்க வேண்டும். வள்ளுவர் சொல்வது போல், இங்கே பொய், வாய்மை ஆகி விடும். ஏனென்றால் நோக்கம், சேர்த்து வைக்கும் நல்ல நோக்கம். ஆனால் பெரும்பாலும் ஆண்கள், சபலம் அடைவார்கள். நமக்கு நல்ல சான்ஸ், என்று ஆறுதலாக பேசுவார்கள்!
பெண்கள் அந்த நேரத்தில், குழப்பம் அடையும் படி பேசினால், அந்த பெண் சலன பட வாய்ப்புகள் அதிகம். ஒரு பெண் தன் கணவனை பற்றி ஒரு ஆணிடம் குறை சொல்வது என்பது, ஆண்களை பொறுத்தவரை, சிக்னல் கொடுப்பது மாதிரி! வாய்ப்பை தவற விடாதே, என்றுதான் அந்த ஆண் உள்மனம் சொல்லும், அந்த பெண் தன் சொந்த தங்கையாக இல்லாத பட்சத்தில்!