தேவதைகளின் திருவிழா
*அம்மாவை* உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும்..
அது உறவல்ல, உயிரென்று..
*சகோதரியைப்* புரிந்தவர்களுக்குத் தான் தெரியும்..
அது உறவல்ல, உரிமையென்று..
*மனைவியை* நேசிப்பவர்களுக்குத் தான் தெரியும்..
அது உறவு அல்ல, உயிரில் பாதியென்று....
*மகளைக்* கொண்டாடுபவர்களுக்குதான் தெரியும் ..
அது பாசம் அல்ல சுவாசமென்று....
*பாட்டியோடு* கதைபேசியவர்களுக்கே புரியும்
அது கிழம் அல்ல, வாழ்வில் பலமென்று...
*தோழிகளைக்* கொண்டாடுபவர்களுக்குத்தான்
தெரியும்..
அது கூட்டமல்ல, வாழ்வில் பூந்தோட்டமென்று.
மொத்தத்தில்
கடவுள் போலத்தான் பெண்களும்,
உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்!
பெண்மை என்பது வெறும் உருவமல்ல,
பெருமைக்குரிய பெருமித உணர்வென்று
பெண்மை என்றால் மென்மை
பெண்மை என்றால் நன்மை
பெண்மை என்றால் உண்மை
பெண்மை என்றால் தாய்மை
மென்மையான பெண்மையை
உண்மையாகக் கொண்டாடினால்
உலகம் அடையும் பெரும் நன்மை
மகளிர்தின விழா அல்ல- இது
தேவதைகளின் திருவிழா