Breaking News :

Thursday, May 01
.

"பெண்" என்பவள் எல்லைகள் இல்லா...


"பெண்தானே" என்று தாழ்வாக நினைக்காதே ... "அவள்" அங்கீகரிக்கா விட்டால் உன்னை "ஆண்மகன்" என்று உலகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது..!

ஒவ்வொரு பெண்ணின் "கடின" உழைப்புக்கு பின்னாலும் பொறுப்பற்ற ஓர் ஆண் இருக்கின்றான்..!
பெண்கள் "சந்தோஷமா இருந்தா" அவுங்க பேசுறத யாராலும் நிறுத்த முடியாது... "சோகமா" இருந்தால் அவுங்கள யாராலும் பேச வைக்க முடியாது..!

பொண்ணுங்க சிரிச்சா அழகா இருக்கும்... ஆனால் அந்த சிரிப்புக்குள் "ஆயிரம் கவலைகள்" இருக்கும்..!
"பெண்" ஒரு "அழகிய இசைக்கருவி"... இரைச்சல் வருகிறதே என்று "குறை" சொல்வது முட்டாள்தனம்... "இசைக்க" தெரியவில்லை என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்..!

கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு சமாதானத்திற்காக ஏங்கும் குழந்தையாகிறாள் பெண் ... பிடித்தவர்களிடம் மட்டும்..!

தன்னை விட தனது வாழ்க்கை துணைக்கு "அறிவும் திறமையும் அதிகம்" என்று தெரிந்த பின்... பெண் சந்தோசம் கொள்கிறாள்... ஆண் சந்தேகம் கொள்கிறான்..!

பெண்களுக்கு வீரமான ஆண்களை விட .. "அன்பான" ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!
ஆயிரம் பேர் எதிர்த்து நின்று நம்மீது "பழி" சொன்னாலும் தவறு நம் மீதே இருந்தாலும் நம்மை விட்டுக் கொடுக்காமல் இறுதிவரை "போராடும் உறவுக்கு" பெயர்தான் "மனைவி"..!

யார் மீது கோபம் வந்தாலும் "அதை" பிடித்தவர்கள் மீது காட்டுவதே பெண்களின் குணம்...! ஆணின் "அன்பை உணராது" எந்த "பெண்ணும்" சந்தோஷமாக வாழ்ந்தது இல்லை... பெண்ணின் "உணர்வுகளை" புரிந்து கொள்ளாமல் "ஆண்கள்" இவ்வுலகில் எதையும் சாதித்தது இல்லை...!

பெண்களின் மனதை அறியும் நூல் எந்த நூலகத்திலும் இல்லை... அவளை "காதலித்தவனை" தவிர...!
ஆயிரம் கோடி தங்க நகைகளை அணிந்தாலும் ஒரு பெண்ணிற்கு ... ஒற்றை மஞ்சள் கயிறு கொடுக்கும் மரியாதையை கொடுத்து விட முடியாது...!

தனக்கே வலித்தாலும் தன்னை "நேசித்தவர்களுக்கு" வலிக்க கூடாது என்று நினைப்பது தான் பெண்களின் குணம்..!

பெண்கள் ரோஜா செடி போன்றவர்கள்... கல்லும் இருக்கும்... மண்ணும் இருக்கும் ... முள்ளும் இருக்கும்... கல் கலையாவதும்... மண் மணமாவதும்... முள் முளையாவதும்... பெண்களின் கைகளிலே தான் உள்ளது..!
உயிரை பெற்று எடுக்கும் பலத்தையே பெண்களுக்கு கொடுத்த இறைவன்...  அழுகையை பலவீனமாக கொடுத்து அடிமையாக்கி விட்டான்..!

அழகென்றும்... அறிவென்றும்... கறுப்பென்றும்... சிகப்பென்றும்... அடையாளம் எத்தனை...? அனைத்திலும் சிறப்பு பெண்மை..!

கடவுள் எழுதிய கவிதை பெண்... ஆனால் அந்த கவிதையை தினமும் வர்ணிப்பது ஒரு ஆண்... !
உலகில் ஆண் இமயமாய் திகழ்கிறான்... பெண் அதில் ஓடும் வற்றாத நதி ஆகிறாள்... அவள் போகும் இடமெல்லாம் பசுமை.. புகழ்.. வெற்றி.. மகிழ்ச்சி... !

ஒரு பெண் திமிராக இருப்பதற்கு அவளின் ஒழுக்கமும் நேர்மையான "அன்பான குணமே" காரணம்..!
பெண்களுக்கு மரியாதை கொடுங்கள்... உங்கள் அம்மா பெண் என்பதால்... இல்லை நீங்கள் சிறந்த "ஆண்" என்பதால்...!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.