நடிகர் குமரிமுத்து கல்லறையில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்?

By Mini Cini

பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கல்லறையில் பொறிக்கப்பட்ட வார்த்தைகள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அது என்ன வாசகம் தெரியுமா ?

90களின் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் பலரும் வலம் வந்தனர், ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். அப்படி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களில் ஒருவர் தான் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து. பலரையும் தனது நகைச்சுவை நயத்தால் வயிறுகுலுங்க சிரிக்க வைத்தவர்.

குமரிமுத்து என்ற பெயரை கேட்டாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அவரின் தனித்துவமான அந்த சிரிப்பு தான். அந்த தனித்துவமான சிரிப்பே பல படங்களில் இவர் நடிக்க வாய்ப்பை பெற்று தந்தது.  தன்னுடைய 14 வயதிலேயே கன்னியாகுமரியை விட்டு சென்னைக்கு வந்த குமரி முத்து, நாடக மேடைகளில் நடித்ததன் மூலம் திரையுலகில் நுழைந்தார். - மாறுகண்களுடன்மிகவும் சாதாரணமான தோற்றத்தை கொண்ட குமரிமுத்து, சினிமாவில் பல இன்னல்களையும், கஷ்டங்களையும் கடந்து திரைத்துறையில் சாதித்தவர்.  முதன் முதலில் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தின் மீது கடுமையாக விமர்சனம் செய்தவர் அதனால் சங்கத்திலிருந்து நிரந்தர உறுப்பினர்  பதவியிலிருந்து விளக்கப்பட்டவர். அதை எதிர்த்து அவர் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

கருணாநிதியின் மீது இருந்த அதீத பாசத்தால் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக விளங்கியவர் குமரி முத்து.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் குமரி முத்து.

சிறந்த யதார்த்த நடிகர், சிறந்த பேச்சாளர், கிறிஸ்துவ ஊழியர் என தனித்துவமான குணங்களுடன் விளங்கிய இவர், 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்த நடிகர் குமரிமுத்துவின் கல்லறை வாசகம் பலராலும் பேசப்பட்ட ஒன்று.  இயக்குனர் மகேந்திரன் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு இயக்குநர் அனீஸ், மந்தவெளி சென்மேரிஸ் கல்லறைத் தோட்டத்தில் இருந்த குமரிமுத்துவின் கல்லறைவாசகம் குறித்து அவர் பகிர்ந்த செய்தி அப்போது வைரலானது.

நடிகர் குமரிமுத்துவின் கல்லறை வாசகத்தில் “It is the time for the God... to enjoy his laughter” (எங்களை தேவையான அளவு சிரிக்க வைச்சுட்டாரு. ஆண்டவரே இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க ) என்று பொறிக்கப்பட்டிருக்கும்.

கல்லறையின் மேல் பொறிக்கப்பட்டிருந்த இந்த வாசகம் பலரின்  கவனத்தையும் ஈர்த்தது. தந்தை மீது அவரின் பிள்ளைகள் வைத்திருக்கும் அலாதியான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும். இந்த கல்லறை வாசகம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

.
மேலும்