Crew க்ரூ (இந்தி) - திரைவிமர்சனம்

By News Room

தமிழ் படங்கள் தவற விடுவதும், இந்தி படங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியதும்.

கதை, பணச்சிக்கலில் இருக்கும் மூன்று ஏர்ஹோஸ்ட்கள், 9 மாதங்களாக சம்பளம் கொடுக்காத ஏர்லைன்ஸ், இந்த சூழலில் தங்கம் கடத்துகிறார்கள். இந்த நிலையில் கஸ்டம்சில் மாட்டி தப்பிக்கிறார்கள்.

இவர்களை போட்டுக்கொடுத்தது யார்? தங்க கடத்தலின் கிங்பின் யார்? ஏர்லைன்ஸ் நிறுவனம் திவால் ஆவதிலிருந்து தப்பித்ததா? ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்ததா என்பதை கொஞ்சம் நகைச்சுவை கலந்து சொல்லியுள்ளார்கள்.

கதை என்னமோ சிம்பிளான கதை தான், ஆனால் திரைக்கதை கடைசி 20 நிமிடங்கள் தவிர்த்து சிறப்பாக உள்ளது. கதையை ஆரம்பிக்கும் போதே இந்த மூன்று ஏர்ஹோஸ்ட்களையும் விமானத்தை நிறுத்தி விசாரணைக்கு அழைத்து போவதில் தொடங்கி கதை ஃப்ளாஷ் பேக்கிற்கும், லைவ்க்கும் மாறி மாறி எந்த குழப்பமும் இல்லாமல் வருகிறது.

அதே போல இந்த மூவரும் தங்க கடத்தலுக்கு போகும் சூழல், அதற்கான ஜஸ்டிபிகேசன், இவர்களுடைய கேரக்டர் ஆர்க் (transformation) எல்லாம் குழப்பம் இல்லாமல் செல்கிறது. ஆனால் கடைசி 20 நிமிடங்கள் கிளைமாக்ஸ் உட்பட நிகழ்வுகள் எல்லாம் காதில் பூ ரகங்கள் என்றாலும் மிச்ச ஒன்றே முக்கால் மணி நேர படம் நன்றாக போவதால் மன்னித்து விட்டுவிடலாம்.

ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு சிறு சஸ்பென்ஸ், ரோலர் கோஸ்ட் எஃபெக்ட் (மிஷன் ஃபெயில் சக்சஸ் என மாறி மாறி வருவது) என நம்மை படத்தை நிறுத்தாமல் பார்க்க வைக்கிறது.

சமீபத்தில் நான் பார்த்த தமிழ்படங்கள் நல்ல கனத்த கதையோடு வந்தன, ஆனால் திரைக்கதையில் சொதப்பின. ஆனால் இந்தி படங்களில் கதை சுமாராக இருந்தாலும் திரைக்கதையை சிறப்பாக செய்துள்ளனர்.

தமிழ் இயக்குனர்கள் கதையில் செலுத்தும் கவனத்தை விட கூடுதலான கவனத்தை திரைக்கதையில் செலுத்த வேண்டும்.

Crewmovie

.
மேலும்