இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மக்கள்திலகம்

By News Room

லண்டன் கலைக்கல்லூரியல் உலக சினிமா சரித்திரத்தில் 100-வது ஆண்டு ( 1895 - 1995)  இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே வெற்றித்திலகம்  மக்கள்திலகம் :

1995ஆம் ஆண்டில் உலக சினிமா தனது 100 வது  பிறந்த நாளை கொண்டாடியது.  இதை சிறப்பிக்கும் பொருட்டு இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலக சினிமா சரித்திரம் ( The Oxford History of world cinema)  என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது.   

800 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் சினிமாத்துறையில் அறிமுக நாளிலிருந்து இன்று வரை வெளியான முக்கியமான திரைப்படங்கள் இயக்குனர்கள் , நடிகர்கள் ,  நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர்கள் பற்றிய பல விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  இப்புத்தகத்தில் கடந்த 100 ஆண்டுகளாக உலக முழுவதிலும் கலைத்துறையின் மேம்பாட்டிற்காக உழைத்த 140 பேர்களின் வரலாறு தனித்தனியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.  

இதில் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த மூன்று பேர்கள் மட்டும் இதில் இடம்பெற்றுள்ளனர்.  அவர்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ( நடிகர்) , நர்கீஸ் (இந்தி நடிகை) , சத்ய ஜித்ரே ( வங்காளப்பட டைரக்டர்)  இதில் இந்தியாவில் இருந்து நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டு அகிலம் முழுவதும் புகழ் காணும் ஒப்பற்ற பேரரசராக திகழ்பவர் மக்கள்திலகம் ஒருவரே ! என்பது உலகறிந்த விஷயம் ஆகும்.

இயற்கையான பிரதிபலிப்பிற்க்கு கிடைத்த மகத்தான வெற்றி ! இந்தப் புத்தகம் 1995 ல் லண்டன் கலைக்கல்லூரியில் வெளியிடப்பட்டது.  இதன் மூலம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உலகம் முழுவதும் அறிமுகமாகிறார் என்பது எவராலும் மறுக்க முடியாது.  இந்திய திரையுலகமே இதன் மூலம் தன் பெருமையை தக்க வைத்துள்ளது.  

                             பொம்மை இதழ் -  1995

.
மேலும்