இளையராஜா இசையில் SPB பாடிய ஒரு சூப்பர் ஹிட் பாடலுக்கு, சுச்சுவேஷன் தெரியாததால், சோக பாடலை கூட எஸ்.பி.பி சிரித்து கொண்டே பாடிய சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இசைஞானி இளையராஜா இசையில், எஸ்பிபி ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர்கள் இருவரும் பாடகர் - இசையமைப்பாளர் என்பதை தாண்டி, சிறந்த நண்பர்களாகவும் பார்க்கப்பட்டவர்கள். எஸ்பிபி இளையராஜா மீது உள்ள நட்பின் காரணமாகவே, எவ்வளவு பிசியாக இருந்தாலும் இளையராஜா தன்னுடைய படத்தில் பாட வேண்டும் என கூறினால் அதனை மறுக்காமல் செய்பவர்.
இதுவரை எஸ்.பி.பி மற்றும் இளையராஜா காம்போவில் வெளியான அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி, நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று, முத்துமணி மாலை, மன்றம் வந்த தென்றலுக்கு, 'கல்யாண மாலை', 'இது ஒரு பொன்மாலை பொழுது' போன்ற 50-க்கும் மேற்பட்ட பாடல்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு.. தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.
சரி, சுச்சுவேஷன் தெரியாததால்... சோக பாடலை கூட, எஸ்.பி.பி சிரித்து கொண்டே பாடி இளையராஜாவிடம் சிக்கிய சுவாரஸ்ய தகவல் பற்றி பார்ப்போம். 'இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1986-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'மௌன ராகம்'.
இந்த படத்தில் மோகன், ரேவதி, கார்த்திக், வி.கே.ராமசாமி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடல்களாக இருந்தது.
அதன்படி இப்படத்தில், மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்ற நிலையில்... அதில் இரண்டு பாடலை எஸ்.பி.பி சோலோவாகவும், ஜானகியுடன் சேர்ந்து ஒரு பாடலையும் பாடி இருப்பார். 'மௌன ராகம்' படத்தில் இடம்பெற்ற 'நிலாவே வா' பாடலின் லிரிக்ஸ் மற்றும் டியூன் அனைத்தையும் இளையராஜா எஸ்.பி.பிக்கு கூறிவிட்டு நிலையில், எஸ்.பி.பி பாடலை பாடுவதற்கு தயாராக இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு வந்துள்ளார். இளையராஜா அங்கு இல்லாததால்... அங்கிருந்தவர்கள் எஸ்.பி.பி பாடிய பாடலை ரெகார்ட் செய்துகொண்டு அனுப்பியுள்ளனர்.
இளையராஜா வந்து பாடலை கேட்டு விட்டு, இது சோகமான சுச்சுவேஷனில் வர கூடிய பாடல்... இதை ஏன் சிரித்து கொண்டு மிகவும் எனர்ஜியுடன் பாடியுள்ளார் எஸ்.பி.பி என கேட்டதோடு மட்டும் இன்றி இந்த பாடலை மீண்டும் ரீ-ரெக்கார்டிங் செய்ததாக கூறப்படுகிறது. இரண்டாவது முறை எஸ்.பி,பி-யை ராஜா பாட வைத்திருந்தாலும், திரைப்படம் வெளியான பின்னர் இந்த பாடல் அதிக அளவில் கவனிக்கப்பட்டது.
சோக பாடலை கூட ராஜாவால் தான் ஹிட் கொடுக்க முடியும் என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். அதே போல் இந்த பாடலுக்கு எஸ்.பி.பி-யின் குரலும் மிகப்பெரிய பலம் என்றால் அதில் சந்தேகமே இல்லை.