பாலுடா செய்வது எப்படி?

By Tejas

தேவையானவை:

வாழைப்பழம் - ஒன்று ஆப்பிள் - ஒன்று திராட்சைப்பழம் - ஒரு கப் பால் - இரண்டு கப் ஐஸ் கிரீம் - தேவையான அளவு (எந்த ப்ளேவர் ஆனாலும்) சேமியா - அரை கப் (வேகவைத்து தனியாக வைக்கவும்) ஜவ்வரிசி - அரை கப் (வேகவைத்து தனியாக வைக்கவும்) பாதாம் பருப்பு - பத்து (வெந்நீரில் ஊறவைத்து பொடியாக நறுக்கி வைக்கவும்) ரூ ஆப்ஸா (அ) ரோஸ் எசன்ஸ் - எட்டு டீஸ்பூன்

செய்முறை

மூன்று பழங்களையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் ஒரு பெரிய ஜுஸ் டம்ளரில் வேகவைத்து வைத்திருக்கும் சேமியா ஒரு டேபிள் ஸ்பூன், பின் ஜவ்வரிசி வேகவைத்தது ஒரு டேபிள் ஸ்பூன், பிறகு கொஞ்சம் பால், அடுத்து ரூ ஆப்ஸா, அடுத்து வாழை,ஆப்பிள், கொஞ்சம் பால், பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு ஆகியவற்றை போடவும். இதே போல் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.

கடைசியில் ஒரு பெரிய கரண்டி ஐஸ் கிரீம், அதன் மேலே அலங்கரிக்க திராட்சை (அ) ஸ்ட்ராபெரி கூட போடலாம்.

சூப்பர் பாலுடா கடையில் தான் சென்று குடிக்கனுமா என்ன நாமே செய்யலாமே பழங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேறு ஏதாவது சேர்ப்பதாக இருந்தால் சேர்த்து கொள்ளலாம்.

.
மேலும்