காலிஃப்ளவர் பக்கோடா செய்வது எப்படி?

By Tejas

தேவையானவை:

காலிஃப்ளவர் - ஒன்று கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - கால் கப் கறிவேப்பிலை - ஒரு கொத்து பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி வெங்காயத்தாள் - 2 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க

செய்முறை தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி சுடுத் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் போட்டு வைத்திருந்து எடுக்கவும். காலிஃப்ளவருடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி பிசறி வைக்கவும்.

காலிஃப்ளவர் கலவையை 15 நிமிடம் ஊற விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசறி ஊற வைத்த காலிஃப்ளவரை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். க்ரிஸ்பியான காலிஃப்ளவர் பக்கோடா ரெடி. வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி அதன் மேலே தூவவும்.

.
மேலும்