கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?

By Tejas

தேவையானவை:

மொச்சைப்பயறு - கால் கிலோ கருவாடு - கால் கிலோ நறுக்கிய சிறிய வெங்காயம் - 15 நறுக்கிய தக்காளி - 3 பூண்டு - 10 பல் மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் மிளகாய் தூள் - 2 ஸ்பூன் தனியாத்தூள் - 3 ஸ்பூன் புளி - எலுமிச்சம்பழ அளவு கடுகு - கால் ஸ்பூன் கருவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு

செய்முறை: மொச்சை கருவாட்டு குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் கருவாட்டை போட்டு சுத்தம் செய்து நன்றாக கழுவி கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் மொச்சைப்பயறை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக்கொள்ளவும்.

நன்கு ஊறியதும், ஒரு குக்கரில் மொச்சைப்பயிறைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் புளியைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அதில் வடிகட்டி வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றவும்.

குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன், அதில் மொச்சைப்பயிறு, கருவாட்டை சேர்த்து 15 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான மொச்சை கருவாட்டு குழம்பு ரெடி.....

.
மேலும்