மேஷம் மேஷ ராசி நண்பர்களே, அலைச்சல் அதிகமாகும் உடல் உபாதைகள் உண்டாகும். குடும்ப செலவுகளை குறைக்கவும். முக்கிய காரியங்களுக்கும் அவசரம் காட்ட வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே, பெற்றோர்கள் நலனில் அக்கறை கொள்ளவும். எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். கடன் பிரச்சனை தலைதூக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.இன்றும் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் மிக முக்கியமாகும்.
மிதுனம் மிதுன ராசி நண்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சிக்கனமாக இருக்க பழகிக்கொள்ளவும்.கடன் வாங்குவதை தவிற்க்கவும் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கடகம் கடக ராசி நண்பபர்களே, பெண்களால் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உறவினர்களிடத்தில் சுமூக உறவு ஏற்படும். எதிரிகள் அடிபணிந்து போவர். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும் உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்மம் சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்திற்கு வேண்டியது கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். நேர்மறை எண்ணங்களை மனதில் இருந்து அகற்றவும். பண விவகாரங்களில் கவனம் தேவை.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
கன்னி கன்னி ராசி நண்பபர்களே, குடும்ப வளர்ச்சிக்கான திட்டங்கள் இருக்கும். சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்ய முடியும். காரிய தடை விலகும். முன் கோபத்தை குறைப்பது நலம்.தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும்.
துலாம் துலாம் ராசி நண்பர்களே, குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும்.பண வரவு தாரளமாக இருக்கும் நினைத்த காரியம் நிறைவேறும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
விருச்சிகம் விருச்சிக ராசி நண்பர்களே, முக்கிய நபர் ஒருவரை சந்திக்க நேரிடும். வண்டி வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தேலையற்ற வீண் சிலவுகள் உண்டு பழைய பிரச்சினைகளில் ஒன்று தீரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
தனுசு தனுசு ராசி நண்பர்களே, முன் கோபத்தால் உறவினர்களிடம் பகை உண்டாகும். வாக்கு சாதுரியம் ஏற்படும். நண்பர்களிடம் கேட்டது கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.
மகரம் மகர ராசி நண்பர்களே,பேச்சில் நிதானம் அவசியம்.வீண் வதந்திகளை நம்பாதீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். பெண்களால் சில நன்மை உண்டு. பயணங்களால் அலைச்சல் இருக்கும். தொழில், வியபாரத்தில் சாதிக்க முடியும்
கும்பம் கும்ப ராசி நண்பர்களே, மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். உடல் உபாதைகள் நீங்கும்.மருத்துவ சிலவுகள் குறையும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.
மீனம் மீன ராசி நண்பர்களே, தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். மனக்குழப்பம் நீங்கும்.உற்சாகமாக காணப்படுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்துக்கள் தவிற்க்கவும்.உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் மிதமான வருமானத்தை தரும்.