ரவா தோசை செய்வது எப்படி?

By Tejas

தேவையானவை

காய்ந்த வத்தல் – 6

இஞ்சி – 15 கிராம்

சீரகம் – ஒரு தேக்கரண்டி

தக்காளி பழம் – 3

வறுத்த ரவை – ஒரு கப்

கோதுமை மாவு – கால் கப்

வெங்காயம் – 2

மல்லி இலை – கைப்பிடி அளவு

கேரட் – 1

 

செய்முறை

 

ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த வத்தல், இஞ்சி, சீரகம், நன்கு பழுத்த தக்காளி பழம் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையில் நன்கு வருத்த ரவை ஒரு கப் மற்றும் கோதுமை மாவு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒருமுறை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 

அரைத்த இந்த பொருட்களை அகலமான ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய மல்லி இலை, துருவிய கேரட் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். இறுதியாக சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம்.

 

ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நாம் தயாரித்து வைத்திருக்கும் மாவு வைத்து முறுமுறுவென தோசை சுட்டு எடுக்கலாம். அதே நிமிடத்தில் இட்லி மாவு இல்லாமல் முறுமுறு தக்காளி தோசை தயார். இதற்கு தனியாக சட்னி எதுவும் அழைக்க தேவையில்லை இதில் காரம் கலந்திருப்பதால் அப்படியே சாப்பிட்டு விடலாம்.

#sl

.
மேலும்