பணவரவை அதிகரிக்கும் ராகுகால தூப வழிபாடு!

By Tejas

நாம் அனைவரும் அதிகமான பண வரவையும், நிலையான சேமிப்பையும் விரும்புகிறோம். ஆனால் சிலருக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பே வராது. சிலர் சம்பாதித்தாலும், அது கையில் தங்காது. இந்தப் பணதடைகளை நீக்குவதற்கு ஒரு சக்தி வாய்ந்த ஆன்மிக முறையாக ராகுகால தூப வழிபாடு பரிந்துரைக்கப்படுகிறது!

ராகுகால தூப வழிபாடு எப்படி செய்ய வேண்டும்? துர்க்கை அம்மன் என்பது நம்முடைய துன்பங்களையும் தடைகளையும் போக்கும் சக்தி வாய்ந்த தெய்வம். துர்க்கையை ராகுகாலத்தில் வழிபடுவதால் பலன்கள் அதிகரிக்கும். குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் இந்த தூப வழிபாடு மிகுந்த சிறப்பை தரும்.

தேவையான பொருட்கள்: வெண்கடுகை (White Mustard Seeds) பச்சை கற்பூரவள்ளி இலை (Fresh Karpooravalli Leaves) பச்சை கற்பூரம் (Green Camphor) கொட்டாங்குச்சி அல்லது அடுப்பு கரி (to create fire) செய்வது எப்படி?

1. ராகுகாலம் ஆரம்பிக்கும் (மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை) நேரத்தில் பூஜை அறையில் நெருப்பு தயார் செய்யவும். 2. அதில் முதலில் வெண்கடுகை தூவவும். 3. பின்னர் பச்சை கற்பூரவள்ளி இலைகளை வைக்கவும். 4. அதன் மேல் பச்சை கற்பூரம் வைக்கவும். 5. தூபம் கிளம்பும் பொழுது, அந்த தூபத்தை வீட்டு முழுவதும் காட்ட வேண்டும், குறிப்பாக கதவுகள் மற்றும் மூலைகளில். இதில் கிடைக்கும் நன்மைகள்: பண வரவுக்கு தடைகள் நீங்கும் வீடு முழுவதும் நேர்மறை சக்தி நிலைக்கும் தீய சக்திகள் விலகும் செல்வ செழிப்பு பெருகும் இந்த தூப வழிபாட்டை ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும் ராகுகாலத்தில் பின்பற்றினால், உங்கள் வீடு பண செழிப்பும், ஆனந்தமுமான வாழ்க்கையும் பெறும்!

.
மேலும்