திருநள்ளாறு செல்ல கூடாத ராசிகள்?

By News Room

சனிபகவானுக்கு ஏற்ற பரிகார தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அனைவரும் திருநள்ளாறு சென்று வழிபடுவது வழக்கம்.  திருநள்ளாறு கோவிலில் உள்ள குளத்தில் நீராடி சனி பகவானை வழிபடுவதன் மூலம் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச்சனி நீங்கும் என்பது ஜோதிடத்தில் கூறியுள்ளது.

இதனால், தான் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்து உள்ளார்கள். ஆனால் சில நபர்கள் திருநள்ளாறு செல்ல கூடாது என்று இருக்கிறது.  அதனை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்ள போகிறோம்.

திருநள்ளாறு செல்ல வேண்டிய ராசிகள்:

மகர ராசி, கும்ப ராசிக்கு அதிபதியக இருப்பது சனி பகவான் தான். ராசிக்காரர்கள் மட்டுமில்லாமல் மகரம் மற்றும் கும்ப லக்கின காரர்களும் திருநள்ளாறு சென்று வரலாம்.   இவர்கள் திருநள்ளாறு சென்று வருவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். உங்களுடைய வாழ்க்கையில் கடன் பிரச்சனை, திருமணம் தாமதம் போன்ற எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி திருநள்ளாறு சென்று வருவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை காண்பீர்கள்.

ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் திருநள்ளாறு சென்று வருவதன் மூலம் உங்களுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை காண்பீர்கள். வேலை இல்லை, வரன் அமையவில்லை, உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை போன்ற எந்த பிரச்சனையாக இருந்தாலும் திருநள்ளாறு சென்று வருவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை காண்பீர்கள்.

திருநள்ளாறு செல்ல கூடாத ராசிகள்

4 ராசிக்காரர்கள் திருநள்ளாறு சென்று வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் மற்றும் துன்பங்களை ஏற்படுத்தும். அவை எந்தெந்த ராசிகள் என்று தெரிந்து கொள்வோம்.

மிதுன ராசி,

கடக ராசி,

சிம்ம ராசி,

கன்னி ராசி

போன்ற ராசிக்காரர்கள் திருநள்ளாறு செல்ல கூடாது. அது போல இந்த மிதுனம் கடகம், சிம்மம், கன்னி போன்ற லக்ன காரர்கள் திருநள்ளாறு செல்ல கூடாது.

இவர்கள் திருநள்ளாறு சென்று வருவதன் மூலம் உங்களுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் இந்த ராசிக்காரர்கள் மற்றும் லக்கின காரர்கள் திருநள்ளாறு செல்வதை தவிர்க்க வேண்டும்.

பாவத்தை செய்யாதீர்கள்:

சனி பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் திருநள்ளாறு சென்று வருவதன் மூலம் சனி பகவானின் ஆதிக்கத்திலிருந்து தப்பித்து கொள்ளலாம் என்று கூறுகிறார்கள்.

அது போல அங்குள்ள குளத்தில் நீராடுவதன் மூலம் நல்லது நடக்கும் என்று கூறுகிறார்கள். அதற்காக உங்களுடைய துணியை அந்த குளத்தில் போட கூடாது. இது நல்லதல்ல,

ஏனென்றால் இவை பாவத்திற்கு சமமாக பார்க்கப்படுகிறது. குளத்தில் உள்ள நீரானது தீர்த்தமாக பார்க்கப்படுகிறது. அப்போ அந்த தீர்த்தத்தில் சென்று துணியை போட கூடாது.

சனீஸ்வரனுக்கு பிடித்தது:

இந்த கோவிலுக்கு சென்று நேராக சனீஸ்வரனை சென்று வழிபட கூடாது. இந்த கோவிலுக்கு சென்று முதலாவதாக சிவனை வழிபட வேண்டும், அதன் பிறகு அம்பாளை வழிபட வேண்டும், கடைசியாக தான் சனீஸ்வரனை சென்று வழிபட வேண்டும். இப்படி வழிபடும் போது சனீஸ்வரன் உங்களுக்கு முழு அருளை பெற முடியும்.

அடுத்து முக்கியமாக நீங்க எந்த கோவிலுக்கு சென்றாலும் சனீஸ்வரனுக்கு தானம் கொடுப்பது பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அதனால் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள். சனீஸ்வரன் மனம் குளிர்வார். இதனால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்..

.
மேலும்