மேஷம் மேஷ ராசி நண்பர்களே, குடும்ப சூழல் சாதகமாக அமையும். எதையும் தாங்கும் மனவலிமை உண்டாகும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும் புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே, வீட்டில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். முக்கிய நபர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.உறவினர்களிடமிருந்து நற் செய்தி ஒன்று கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மிதுனம் மிதுன ராசி நண்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் அவசரமில்லாமல் செயல்படுவது நல்லது. அவசர முடிவுகளால் பணமிழப்புகள் ஏற்படும் .பெற்றோர்கள் பாசக்கரம் நீட்டுவர். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.
கடகம் கடக ராசி நண்பர்களே, குடும்ப விஷயங்களில் கவனமாக இருக்கவும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும்.எதிர்ப்புகள் தானாக அடங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும்.யாருக்காகவும் உங்களை மாற்றி கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் பணிச்ச்சுமை குறையும்
சிம்மம் சிம்ம ராசி நண்பர்களே, நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களின் வழியில் மனக்கசப்பு வரலாம். கடன் வாங்கி செலவு செய்ய வேண்டி வரும். உத்யோகத்தில் கோரிக்கை நிறைவேறும்.தொழில் வியாபாரங்கள் மந்தநிலை நீடிக்கும்.
கன்னி கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். திடீர் பண வரவுகளால் பண பிரச்சனைகள் குறையும். நெருங்கிய உறவினர்களால் சகாயம் கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
துலாம் துலாம் ராசி நண்பர்களே, செய்யும் செயல்களில் திருப்தியும், மகிழ்ச்சியும் உண்டாகும். மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். புது தொழில், யோகம் அமையும். சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
விருச்சிகம் விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் விட்டு கொடுத்து போகவும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். முன் கோபத்தால் தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும்.வாகன பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
தனுசு தனுசு ராசி நண்பர்களே, குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். எதிர்பார்த்து இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் வரும்.
மகரம் மகர ராசி நண்பர்களே, குடும்ப மதிப்பு உயரும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும்.புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரியவரும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
கும்பம் கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
மீனம் மீன ராசி நண்பர்களே, சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்ய முடியும். உணவு கட்டுப்பாடு அவசியம். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உத்யோகத்தில் செல்வாக்கு கூடும்.