உண்மையான காதல்ன்னு ஒன்னு சத்தியமா இந்த காலத்துல கிடையாது. வேணும்னா குமரிகண்டம் இருந்தப்ப இருந்திருக்கலாம். அது அழியும் போது இதுவும் கூடவே சேர்ந்து அழிஞ்சிட்டுன்னு நினைக்கிறேன்.
உங்கூட நூறு வருஷம் வாழனும், பயப்பட வேண்டாம்டி உன் புருஷன் நான் தான்டி இப்படியெல்லாம் டையலாக் பேசிக்கிட்டு வந்தா வேண்டாம்பா சாமின்னு ஓடிவந்துடுங்க.
அழகு, பணம் இதையெல்லாம் பார்த்து காதல் வராது. குணத்தை பார்த்து தான் காதல் வரும்னு சொல்றவங்களா நீங்க? செமையா அழப்போறீங்கன்னு அர்த்தம்.
காதல் ஒரு ரப்பர் பேன்ட் மாதிரி, காதலை யார் ரொம்ப பிடிச்சிருக்காங்களோ அவங்களுக்கு தான் வலி ரொம்ப அதிகமா இருக்கும். விட்டுட்டு போறவங்க அடுத்தவங்களுக்கு வலிச்சாலும் பரவாயில்லைன்னு நினைக்கிறவங்க.
இந்த கால காதல் சுவிங்கம் மாதிரி ஆரம்பத்தில் இனிக்கும் போகப் போக சுவையில்லாமல் போய்டும்.
காதல் தோல்வியில ஆண்கள் ஏமாறுறாங்க, பெண்கள் ஏமாறுறாங்கன்னு இல்லை. யார் உண்மையா காதலிச்சாங்களோ அவங்க தான் ஏமாறுறாங்க.
நம்ப கண்ணீருக்கு மதிப்பிருக்கு. நம்ப வேண்டாம்னு சொன்னவங்களுக்காக அதை வீணாக்க வேண்டாம். ஏமாத்துன அவங்களே சந்தோஷமா இருக்காங்க. உண்மையா இருந்த நீங்க ஏன் வருத்த படணும். போகட்டும் விடுங்க.
காதல் தோல்விக்கு பிறகு தான் தெரியும் நம்ம எவ்வளவு கண்மூடித்தனமா மத்தவங்களுக்காக வாழ்ந்திருக்கோம்னு. நாம முதலில் நமக்காக வாழனும்.
காதல் தோல்வி ஏற்பட்டவங்க காதலை வெறுக்காதீங்க. காதல் எப்பவும் அழகு தான். நீங்க காதலிச்ச நபர் காதலை அந்த கோணத்தில் காட்டிவிட்டார்.
நம்ப வாழ்க்கையில ஒரு சின்ன பகுதி தான் இந்த காதல். அதனால் ஏற்பட்ட தோல்வி நம் வாழ்க்கை முழுவதையும் வீணாக்கிடவிட்டுட கூடாது. ஏழு பில்லியன் மக்கள் இருக்காங்க இந்த உலகத்துல ஒருத்தவங்களுக்கு கூடவா உங்க மேல காதல் வராம போய்டும். சந்தோஷமா இருங்க.