இரவுகள் தான்.... எனக்குத் தொல்லை..

By News Room

இரவுகள் தான்....எனக்குத் தொல்லை.. கள்வரே.. இரவுகள் தான் எனக்குத் தொல்லை.. இமைக்கு நடுவில் நீ இசைப்பதால் எனக்குத் தொல்லை கருப்பு கூந்தல் தான் எனக்குத் தொல்லை.. கால் கடந்து நீளும் உன் மீசை கார் நிழலும் எனக்குத் தொல்லை இமை மையும் இளமையும் எனக்குத் தொல்லை.. நீ நித்தமும் நினைப்பாய் அதில் நிறைவதும் கரைவதும் எனக்குத் தொல்லை விரல் நடுவே இடைவெளிகள் எனக்குத் தொல்லை.. இடையிடையே நீ தீண்டுவாய் என்ற நினைப்புகள் எனக்குத் தொல்லை இரு கைக்கு நடுவில் இருதய துடிப்பும் எனக்குத் தொல்லை..அது உனக்காக துடிப்பதாய் நடிப்பதும் எனக்குத் தொல்லை இனிமை இந்த இரவுவேளையில் இதழ் வறட்சியும் தொல்லை.. இமைத்தாழ் விலக்கி இரக்கமற்றமூச்சு சூடாகி நீராக முன்பு வியர்த்து வழிவதும் எனக்குத் தொல்லை. இப்புறம் இருப்புகள் தொல்லை.. இருபுறமும் உன் நினைவுகள் சுமையாய் எனக்குத் தொல்லை இமை மேல் யுத்தம் எனக்குத் தொல்லை.. காதலிக்கும் தோழி கேட்டுச்சொன்ன கருக்குழி கவனமும் எனக்குத் தொல்லை. கடக்கும் கடிகார முட்கள் காட்டும் நேரம் எனக்குத் தொல்லை.. அவை ஒன்றையொன்று கட்டியணைத்து கடப்பதும் எனக்குத் தொல்லை. கால் மேல் கால் போட்டு இருப்பதும் எனக்குத் தொல்லைஅவை ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதும் எனக்குத் தொல்லை கத்திமுனை நெற்றி எனக்குத் தொல்லை.. அவை உன் இதழ் இறுக்கம் கேட்பதும் எனக்குத் தொல்லை காதோர கம்மலின் கூச்சல்கள் எனக்குத் தொல்லை.. அவற்றை கையாலாட்டி கேளி செய்யும் காற்றாடிக் காத்தும் எனக்குத் தொல்லை. இப்பேதை கடந்த இளமைப் பருவம் எனக்குத் தொல்லை இப்போது போதையாய் உன் நினைப்பும் எனக்குத் தொல்லை.. கைபிடிக்க நீ சொல்லும் காரணங்கள் எனக்குத் தொல்லை என்னை காரணமின்றியும் நீ கைபிடிக்காதது மட்டுமே இப்போதைக்கு பேதைக்குத் தொல்லை.. .. இயலிசம்...

.
மேலும்