நம்ம திருநெல்வேலிகாரப்பையன் ஒருவன் ரயில்ல போயிட்ருந்தானாம்,
அப்போ செம பிகர் ஒன்னு அவனுக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து ஒக்காந்தாளாம்
நம்மாளுக்கு செம குஷியாயிடுச்சாம்
அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லன்றதால
லைட்டா நம்மாளு அந்த பொண்ண நோட்டம் உட்டானாம்,
அந்த பொண்ணும் மெதுவா
அப்பப்போ இவன பாக்க,
இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க
அப்டியே
வானத்துல பறக்கற பீல்ல இருந்தானாம்...
கொஞ்ச நேரம் கழிச்சு
அந்த பொண்ணு இவன் இருந்த சீட் பக்கம் வந்து ஒக்கார,
அந்த பொண்ணு இவன்ட்ட,
ஒழுங்கு மரியாதையா
உங்கிட்ட இருக்ற வாட்ச், மோதரம், செயினு, பர்ஸ் எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு,
இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம்போட்டு எல்லாரையும் கூப்டுருவேனு சொல்லிச்சாம்...
அதுக்கு நம்ம திருநேல்வேலிகாரன்.
பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து, எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது...
நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில,
நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு எழுதிகாட்டினானாம்...
அந்த பொண்ணும் பேப்பர வாங்கி அதே மாதிரி எழுதி காட்டினாளாம்...
அத வாங்கி பாக்கெட்ல வச்ச பின்னாடி நம்மாளு மெதுவா சொன்னானாம்,
இப்போ கத்துடி பாக்கலாம்...!!!
ங்கொய்யால, யாருகிட்ட..!