நூல் : காவி நிறத்தில் ஒரு காதல் ஆசிரியர் : வைரமுத்து பக்கங்கள் : 198
காதலிக்கு திருமணம் ஆகிவிட்டதென்று வீட்டை விட்டு வெளியேறிய காதலன் சோகத்தில் சாமியாராய் அமர்ந்துவிடுகிறான். பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு சாமியார் மலையில் இருந்து இறங்கி வந்தால் உலகமே வித்தியாசங்களால் நிரம்பி இருக்கும்.
அவள் விலாசத்தை தேடித் தேடி அலைந்து அவளும் தனக்காகவே காத்திருக்கிறாள் என்ற செய்தியறிந்து எப்படியேனும் அவளைக் கண்டுபிடிக்கத் துடிக்கிற காதலனுக்கு கடைசியில் பேரதிர்ச்சி..
துப்பாக்கி முனையில் அவள் தன் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட கோலத்தையும் அவன் அவளை கட்டியணைக்கத்தான் மீண்டும் வந்தேன் என்று சொல்லும் காரணத்தையும் அந்த நிசப்த இரவு நிதானமாய் கேட்கும். பேசுவார்கள் பேசுவார்கள் இருவரும் விடியும் வரை பேசுவார்கள்.
கடைசியில் தன் காதலின் மிச்சத்தை அவன் கையில் தந்துவிட்டு கண்களால் விடைபெறுவாள். துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்த ஒரு போராளியாய் அவள் இரத்தத்தில் நனைந்தாள் - விழுந்தாள் - இறந்தாள்...