அபிஷேகம் செய்யும் வரிசை முறைகள் என்ன?

By Tejas

1.வாசனை தைலம் அல்லது எண்ணெய், 

 

2.திருமஞ்சனத் திரவியப் பொடி அல்லது மஞ்சள் பொடி (அரிசி மாவு), 

 

3.பஞ்சகவ்யம் (பசும்பால்-பசுநெய்-பசுந்தயிர்-மற்றும் கோமயமும் கோஜலமும் கலந்தவை), 

 

4.பஞ்சாமிர்தம் (தேன்-கற்கண்டு-முந்திரி-திராட்சை-பல்வகைப் பழங்கள் மற்றும் நாட்டுச் சர்க்கரை முதலியன), 

 

5.நெய், 6.பால், 7.தயிர், 

 

8.தேன், 

 

9.பழச்சாறு-கரும்புச்சாறு-எலுமிச்சைச்சாறு, 

 

10.இளநீர், 

 

11.அன்னம், சிவாலயங்களாக இருந்தால், 

 

12.திருநீறு-சைவ ஆலயங்களாக இருந்தால், மஞ்சள் காப்பு- வைணவ ஆலயங்களாக இருந்தால், 

 

13.சந்தனம்-பன்னீர் கரைத்தும் உபயோகிக்கலாம், 

 

14.சங்கு நீர். கும்பத்தில் தீர்த்தம் தனியாக மந்த்ரித்து வைக்காமல் போனால் சந்தன அபிஷேகமே நிறைவாகும். 

 

.பூஜை செய்கையில் ஸ்நான அபிஷேமென்றும் மற்றவைகளை அலங்காரமென்றும் அழைக்கிறோம். நைவேத்யானந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி – கிண்ணத்தில் நீர் விடவும். மஹா கணபதயே நம: தாம்பூலம் சமர்ப்பயாமி என்று சொல்லி வெற்றிலை பாக்கைச் சமர்பிக்கவும். கற்பூர நீராஜனம் சமர்ப்பயாமி. கற்பூர தீபம் காட்டவும். மந்திர புஷ்பம் சமர்ப்பயாமி (மலர்தூவி வணங்கவும்). ஆத்ம பிரதக்ஷிணம், நமஸ்காரம் செய்து விநாயகர் துதிகள் சொல்லவும்.

.
மேலும்