பொன்னிறத்தாள் அம்மன் கதை

By News Room

கடையம் என்ற ஊரிலே அணஞ்சபெருமாள் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவி பொன்மாரி என்பவள் மிகவும் அழகுடையவள். அவர்களுக்கு அடுக்கடுக்காக ஏழு ஆண் குழந்தைகள் பிறந்தன. சித்தன், சித்திரன், தம்மப்பன், மேப்பன், கிருஷ்ணன், வேலப்பன், மாடப்பன் என அவர்களுக்குப் பெயரிட்டிருந்தான்.

ஏழு பெண் குழந்தைகள் இருந்தும் பெண் குழந்தை இல்லையே என்ற கவலை பொன்மாரிக்கு ஏற்பட்டது. அவள் கோவிலைத் கூட்டிப்பெருக்கி நீர் தெளித்து கடன்செய்தாள். நாள் தவறாமல் விளக்கேற்றி ஈரத்துணி உடுத்து கோவிலைச் சுற்றி வந்தாள். பெண் குழந்தை பிறந்தால் ரங்கநாதன், குமரி அம்மன், குருத்தோலை நாதன், சிவனணைஞ்ச மார்த்தாண்டன் ஆகிய தெய்வங்களுக்கு நேர்ச்சை செய்வதாக வேண்டிக்கொண்டாள். அதன் பலனாக அவள் கர்ப்பமுற்றாள். பத்தாம் மாதத்தில் வெள்ளிக்கிழமை மீனராசியில் பஞ்சமியில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். பொன்மாரிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தனக்கு உதவி செய்த பெண்களுக்குப் பொன்னை வாரி வாரிக் கொடுத்தாள். பொன்னிறமாயிருந்த அக்குழந்தைக்குப் பொன்மாரி எனப் பெயரிட்டனர். அவள் வளர்ந்து அழகிய பெண்ணாக மாறினாள். பொன்னிறத்தாளின் அழகு பக்கத்து ஊரெல்லாம் பரவியது. அவளுக்குத் தோழிகளும் பெருகினர்.

ஒருநாள் பொன்னிறத்தாளும் அவள் தோழிகளும் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே திருமலை நாயக்கனின் தளவாயின் மகன் இணைசூரப்பெருமாள் வந்தான். அவனுடன் துட்டன், வெள்ளையத்தேவன், துங்களபுரி மறவன், சையீட்டிக்காரர்கள் கியோர் வந்தனர். இணை சூரப்பெருமாள் வேகமாய் பந்தாடும் இணையகொடி பொன்னிறத்தாளைக் கண்டதும் மெய்மறந்து நின்றான்.' நாட்டிலே இவனைப்போல் அழகியைக் கண்டதில்லை ' எனத் திகைத்து நின்றான்.

இணைசூரன் பந்து விளையாடிக் கொண்டிருந்த தோழிகளில் ஒருத்தியை அழைத்தான். இவள் யார் எந்த ஊர் எனக் கேட்டான். தோழிகள் ஐயா இவள் பெயர் பொன்னிறத்தாள். ஊர் தென்காசி. இவள் தந்தை பெருமாள் தலைவன். இவளுடன் ஏழு ண் சிங்கங்கள் பிறந்துள்ளனர். இவளது உறவினர்கள் கடையத்தில் வாழ்கின்றனர் என்றனர்.

இணைசூரனுக்குப் பொன்னிறத்தின் அழகு அறிவை மயக்கியது. உடம்பை உருக்கியது. தன் அரண்மனையில் சென்று படுத்தான். அவனது சோகக் கோலத்தைக் கண்ட தாய் "என்ன நடந்தது மகனே ? " எனக் கேட்டாள்.

மகன் அம்மா, நான் உலாப்போகும்போது பொன்னிறத்தாள் என்ற பெண்ணைக் கண்டேன். தளவாய் நாயக்கன் மகனாம், அவளில்லாமல் நான் வாழமுடியாது அம்மா என்றான். அவன் தாயோ மகனே அந்தப் பொன்னிறம் உன் முறைப்பெண்தான். அவளை எப்படியும் உனக்கு மணமுடித்து வைக்கிறேன் கவலைவிடு என்றாள்.

இணைசூரனின்தந்தைனொரு நன்னாளில் உரிய வரிசைகளுடன் தளவாய் நாயக்கனின் வீட்டிற்குப் போய் ' உன் மகளை என் மகனுக்குத் தா ' எனக் கேட்டான். இணைசூரனும் மகளைக் கொடுக்க இசைந்தான். நல்லநாளில் இனிதாக திருமணமும் நடந்தது. அவர்கள் மதுரையில் மனம் ஒத்து சிறக்க வாழ்ந்தனர்.

திருமணம் முடிந்த இரண்டாம் வருடம் பொன்னிறத்தாள் கர்ப்பமுற்றாள். ஏழாம் மாதத்தில் தன் குலவழக்கப்படி தன் தாய் வீட்டிற்கு வந்தாள். வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தாள். படி சறுக்கியது. துர்சகுனமாயிற்றே என்ன குமோ என நொந்துகொண்டே வீட்டினுள் புகுந்தாள். பொன்மாரி மகளின் பருத்த வயிற்றைக் கண்டு மகிழ்ந்தாள். குலம் தழைக்கப்போகிறது என்று நிறைவு கொண்டாள்.

ஒன்பதாம் மாதத்தில் முளைப்பாரி வைக்கவேண்டும் என்றாள் பொன்னிறத்தாள். அவளது இருபத்தொரு தோழிகளும் ஏழு நாட்கள் விரதம் இருந்தனர். பலவகை வித்துக்களைச் சட்டியிலே இட்டு குருத்தோலை கொண்டு மூடிவைத்தனர். ஏழாம்நாள் வளர்ந்திருந்த முளையை எடுத்துப் பார்த்தபோது எல்லா பெண்களும் வைத்த முளைகளும் வளர்ந்திருந்தன. பொன்னிறத்தாளின் முளை அழுகிப்போய் இருந்தது. எல்லாப் பெண்களும் முளைகளைச் சுனையிலே விட்டனர். எல்லாம் நீரில் மிதந்தன. பொன்னிறத்தாளின் முளையோ நீரில் அமிழ்ந்தது. பொன்மாரி இதைஎல்லாம் அறிந்து என்ன நடக்கப்போகிறதோ என நினைத்து வருந்தினாள்.

தோழிகள் சுனையாடச் செல்லப் புறப்பட்டனர். பொன்னிறத்தாளையும் அழைத்தனர். அவள் எனக்கு நிரம்ப வேலை இருக்கிறது. நீங்கள் முன்னே செல்லுங்கள் நான் வருகிறேன் என்றாள். தோழிகள் சென்றதும் பொன்னிறத்தாள் தயிர் கடைய மத்தை எடுத்தாள். அப்போது பூனை பானையை உருட்டியது. இது என்ந தீய சகுனம் என்று நினைத்து வள் மனம் நடுங்கினாள். பொன்மாரி சமைமயல் செய்துகொண்டிருக்கும்போது பொன்நிறம் சமைலறைக்கு வந்தாள். மகளே இன்று நீ சுனையாடப் போக வேண்டாம்.

உன்னைத் திருடர்கள் பிடித்துக்கொண்டு போய் காட்டாளம்மன் கோவிலில் பலி கொடுப்பதாகக் கனவு கண்டேன். நீ போகாதே என்றாள் பொன்மாரி. பொன்னிறத்தாளோ விதிப்படி நடப்பதைத் தடுக்கமுடியாது. நடப்பது நடக்கட்டும் என்றாள்.

பொன்னிறத்தாள் சுனையாடுவதற்குரிய பொருட்களை எடுத்துக் கொண்டு சுனையாடப் புறப்பட்டாள். தாய் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் கேட்காமல் கிளம்பிப் போனாள். வழியில் தீய சகுனங்கள் எதிர்பட்டன. குறத்தி ஒருத்தி பொன்னிறத்தாளைத் தடுத்து சுனையாடப் போகாதே என எச்சரித்தாள். பொன்னிறமோ எவற்றையும் லட்சியம் செய்யாது சுனைக்குச் சென்றாள்.

சுனைக் கரையில் தோழிகள் நின்றனர். பொன்னிறத்தைக் கண்ட தோழிகளுக்கும் மகிழ்ச்சி. எல்லோரும் சுனையாட இறங்கினர். அப்போது திடீரென மேகம் கவிந்தது. மழை கருக்கொண்டது. புயல் வீசியது. தோழிகள் அவசரமாகக் கரை ஏறினர். பொன்னிறத்தாளும் சுனைக்கரைக்கு வந்தாள். தோழிகள் ' மழை பெய்யப்போகிறது , வா நாம் வாகைநல்லூர் அம்பலத்துக்குச் செல்வோம் " என்றனர். எல்லோரும் நடந்தனர். பொன்னிறம் மெல்ல நடந்தாள். முழு கர்ப்பிணியானதனால் அவளால் தோழிகளை எட்டிப் பிடிக்கமுடியவில்லை. புயல் வேகமாக வீசியது. ஒரு புளியமரத்தின் அருகே சென்றாள். அந்த மரம் காற்றில் டி சரிந்தது. அவள் எங்கே நிற்பது என்று தெரியாமல் அலைந்தாள்.

தோழிகளைக் காணாமல் மழையிலும் காற்றிலும் பதறினாள் அநத நேரத்தில் 61 திருடர்கள் அந்தக் காட்டுக்கு வந்தனர். " எங்கே இன்று திருடச் செல்வது ?" என்று கேட்டான் ஒருவன். இன்னொரு திருடன் இந்தக் காட்டில் உள்ள காட்டாளம்மன் கோவிலில் ஒரு கருவூலம் இருக்கிறது. அதை எடுப்போம் என்றான். உடனே ஒரு திருடன் நான் மந்திரம் படித்தவன். கருவூலம் இருக்கும் இடத்தை மையிட்டுப் பார்க்கிறேன் என்றான். அவன் தீ வளர்த்து மையிட்டுப் பார்த்தான். இந்தக் கருவூலத்தில் கெட்ட வாதைகள் [பேய்கள்] உள்ளன. நாம் இங்கே இருக்கவேண்டாம். வட்டப்பாறைக்குப் போவோம் என்றான்.

கள்ளர்கள் எல்லோரும் வட்டப்பாறையில் கூடினர். குறிகாரக் கள்ளன் பிரசன்னம் [சோழி சோதிடம்] வைத்துப் பார்த்தான். " இக்கருவுலத்தை ஒரு இசக்கி காவல் காக்கிறாள். இந்தக்கருவூலததை எடுக்க பாலாடு சூலாடு கரும்பூனை சேவல் போன்ற பலிகள் கொடுக்கவேண்டும். அதோடு சூலான பெண் ஒருத்தியையைம் இசக்கி பலி கேட்கிறாள் என்றான். மற்ற கள்ளர்கள் எல்லா பலிகளையும் கொடுக்கலாம். சூல் பெண்ணுக்கு எங்கே போவது என சிந்தித்தனர்.

ஒரு கள்ளன் நாம் எல்லோரும் இங்கே வரும்போது சுனைக்கரையில் ஒரு சூலி நின்றதைப் பார்த்தேன் என்றான்.

இந்த நேரத்தில் காட்டாளம்மன் கோவிலுக்குப் பூசை செய்ய ஒரு மறையவன் வந்தான். கோவிலின் முன்னே கள்ளர்கள் கூடியிருப்பதைப் பார்த்து இங்கே எல்லோரும் கூடியிருக்கிறீர்களே என்ன விசேஷம்- என்று கேட்டான். ஒரு கள்ளன் குறும்பாக காட்டாளம்மன் கோவிலுக்குப் பலிகொடுக்க ளைத் தேடிக்கொண்டிருந்தோம். நீ வந்துவிட்டாய் என்றான்.

மறையவன் அய்யோ அண்ணன்மார்களே உங்களுக்குப் பலிகொடுக்க ஒரு சூலியைக் காட்டித் தருகிறேன். என்னை விட்டுவிடுங்கள் என்றான்.

கள்ளர்கள் நல்லது. அவளை எங்களுக்குக் காட்டிவிட்டு நீ செல்வாய் என்றனர். வேதியன் கள்ளர்களை வழிநடத்தி அழைத்துச் சென்று பொன்னிறம் நின்றுகொண்டிருந்த மரத்தைக் காட்டினான். கள்ளர்கள் பொன்னிறத்தைக் கண்டதும் வேதியனை விட்டுவிட்டனர். பொன்னிறத்தாளின் அருகிலே வந்து பெண்ணே நீ யார் எனக் கேட்டனர். அவள் தன் வரலாற்றைக் கூறினாள்.

பொன்னிறம் கள்ளர்களிடம் அண்ணன்மார்களே என்னை என் வீட்டிற்குக் கொண்டு சேர்த்தால் என் தந்தை நீங்கள் கேட்ட பொன்னைத் தருவார்கள் என்றாள். அவள் அஞ்சி அழுதுகொண்டே அவர்களிடம் தன்னை காப்பாற்றும்படி மன்றாடினாள்.

கள்ளர்கள் பெண்ணே நாங்கள் இந்தக் காட்டின் வழி மாடு பிடிக்கப் போகிறோம். உன்னை உன் வீட்டில் கொண்டு சேர்க்கிறோம் வா என்றனர்.

அவள் அவர்களுடன் மெல்ல நடந்தாள் ஒன்பது மாதச் சூலியான அவளால் நடக்கமுடியவில்லை. யாராவது பார்த்துவிடுவார்கள் என்று அஞ்சிய கள்ளர்கள் அவளை ' சீக்கிரம் நட ' என்றனர். ஒரு மாபாவிக்கள்ளன் அவளை எருக்கலைக் கொம்பால் அடித்தான். ஒருவன் புளியம் விளாறால் அடித்தான். அவள் அடி பொறுக்கமுடியாமல் அழுதாள். கள்ளர்கள் அவளைக் காட்டாளம்மன் கோவிலுக்கு இழுத்துச் சென்று ஒரு அறையில் தள்ளி பூட்டி வைத்தனர்.

கோவிலின் முன்னே பெரிய பரண் கட்டி குலை வாழை நட்டனர். குருத்தோலை கட்டினர் துள்ளுகிடாவும். குட்டியும் சூலாடும் கொண்டுவந்து கோவிலின் முன்னே வைத்து அவற்றின் நெஞ்சைப் பிளந்து குருதியைத் தெளித்து வாதைகளுக்கு பலி தந்தனர். வடக்கு வாசலில் பன்றியைப் பலியிட்டனர். சூல் பன்றியின் நெஞ்சைப் பிளந்தனர். மேற்குவாசலில் பூனையை வைத்துக் கீறினர்.

பின்னர் கருவூலம் இருந்த இடத்தில் பலி கொடுக்க பொன்னிறத்தாளைக் கொண்டுவந்தனர். அச்சத்தால் அலறி களைத்து பரண்மீது மயங்கிப்போய் அவள் கிடந்தாள்.

கள்ளர்கள் அவளைப் பரண்மீது வைத்து இறுகக் கட்டினர். ஒருவன் அவள் அடிவயிற்றைக் கீற ஓடிவந்தான். அவளது அழகிய முகத்தைக் கண்டு பின்வாங்கினான். அதன் பிறகு ஒரு மொட்டையன் வந்தான். அவனும் அவளைப் பலிகொடுக்கத் தயங்கினான். கடைசியாக ஒரு மறவன் வந்தான். தயங்காமல் பொன்னிறத்தாளின் அருகே ஒரு தலைவாழை இலையை விரித்தான். அவள் வயிற்றைக் கீறினான். வயிற்றில் இருந்த ண் கருவை வெளியே எடுத்து வைத்து பலிதந்த பிறகு அவள் காலி வயிற்றில் எரியும் திரியை நட்டான்.

கள்ளர்கள் பலியைச் சுற்றி வந்து குரவையிட்டனர். இசக்கியை திருப்தி செய்து கருவூலத்தைத் திறந்து பொன்னை எடுத்தனர். ஒரு கள்ளன் சொன்னான். நாம் பொன்னை அளக்க மரக்கால் கொண்டுவரவில்லை. அதனால் மூங்கில் குழலை வெட்டி வருவோம். வந்தபின் அளக்கலாம் என்று. பத்து திருடர்கள் மூங்கில் வெட்ட காட்டுக்குச் சென்றனர். அவர்களின் கொடூரத்தைக் கண்டு வெகுண்ட காட்டாளம்மை அவர்களின் மேல் புலி கடுவாய்களை ஏவிவிட்டாள். அவர்களை அம்மிருகங்கள் கடித்தன. மற்ற கள்ளர்களை வேதாளங்கள் அடித்தன. எல்லா கள்ளர்களும் இறந்தார்கள். இறந்தவர்கள் நரகத்துக்குச் சென்றார்கள்.

இந்த நேரத்தில் பொன்னிறத்தைக் காணவில்லையே என்று அவள் தாய் பரிதவித்துக்கொண்டிருந்தாள். தோழிகளை அழைத்துக் கேட்டாள். அவர்களுக்கும் பொன்னிறத்தைப் பற்றித் தகவல் தெரியவில்லை. தாய் தந்தையை அழைத்துக் கூறினாள். எல்லா உறவினர்களும் கூடினர். காட்டுவழி சென்று தேடினார்கள். சுனைக்கரையில் பொன்னிறத்தைக் காணவில்லை. காட்டிலும் அவளைக் காணவில்லை.

உறவினர்கள் அவளது காலடித் தடத்தை அடையாளம் கண்டனர். அதை பார்த்து நடந்தனர். அப்போது காயத்தில் கழுகுகள் கூட்டமாகப் பறப்பதைக் கண்டனர். மனம் பதைக்க அந்த இடத்தை அடையாளமாகக் கொண்டு ஓடினார்கள். அந்த இடம் காட்டாளம்மன் கோவிலாக இருந்தது. கோவிலைச் சுற்றி கோழி, டு, பூனை பலிகளைக் கண்டனர். இணைசூரன் கோவிலுக்குள் சென்றான். வயிறு பிளந்தநிலையில் பொன்னிறத்தாளைப் பார்த்தான். அருகிலே ண் கரு. இணைசூரன் அலறியபடி அங்கேயே மயங்கி விழுந்தான்.

மற்றவர்களும் பொன்னிறத்தாளின் உடலைப் பார்த்து பதைத்து விழுந்தனர். பொன்னிறத்தின் தாய் உடனேயே மனமுடைந்து இறந்தாள். ஏழு அண்ணன்மார்களும் மனம் பொறாமல் தங்கள் வாளை மண்ணில் நட்டு அதன்மீது பாய்ந்து உயிரை விட்டனர். எல்லோரும் இறந்தபிறகு இணைசூரனும் வாளை நட்டுப் பாய்ந்து உயிரை விட்டான்.

இறந்துபோன பொன்னிறம் த்மா அடங்காமல் பேயாகி கைலைமலைக்குச் சென்று சிவனிடம் பல வரங்கள் வாங்கினாள். வாவறை, சிறுமாங்குளி, மூன்றரைக் கூடம் போன்ற இடங்களில் இசக்கியாக இருக்க வரம் கேட்டாள். தன்னைப் பலி வாங்கிய கள்ளர்களின் உறவினர்களை தேடிச்சென்று கொன்று குடல்மாலை சூடி பழி வாங்கினாள். தன்னைக் காட்டிக்கொடுத்த வேதியனை கொன்றாள். . அவன் குடும்பத்தை அலைக்கழித்தாள்.

அதன் பின் அவள் தன் தோழிகளைப் பார்க்கப் போனாள். அவர்கள்ளேற்கனவே இறந்து சுனைக்கரையில் பேய்களாக நின்றனர். அவர்களுடன் அவள் இரவில் சுனையாடினாள். காட்டாளம்மநை வழிபட்டாள் . அம்மன் பொன்னிறத்துக்குச் சில வரங்கள் கொடுத்தாள்.

பொன்னிறத்தாள் அதன் பிறகு உக்கிரமான பேயாக மதுரைக்குப் போனாள். அங்குள்ள மக்களைத் துன்புறுத்தினாள். பாண்டிநாட்டு பட்டத்து யானை மீது ஏறி மதுரையைச் சூறையாடினாள். மன்னனின் சோதிடன் மலைவேலனை அழைத்து யானையைப் பிடித்த பேயை விரட்டவேண்டும் என்றான். இளவேலன் மந்திரம் போட்டு பொன்னிறத்தை அறிந்துகொண்டான். அவன் தன் மந்திர வல்லமையால் பொன்னிறதாளை விரட்டப் பார்த்தான். பொன்னிறத்தாள் வேலனை அடித்துக் கொன்றாள் . அவளை யாருமே வெல்ல இயலவில்லை.

ஆனால் வேலனின் மனைவி வேறு பலிகள் கொடுத்து பொன்னிறத்தை வணங்கினாள். மனம் அடங்கிய பொன்னிறத்தாள் பெண்ணுக்கு இரங்கி கணவனுக்கு உயிர்பிச்சை அளித்தாள். அதன் பி ஊரார் அவளுக்கு மதுரையில் அவளுக்கு கோயில் கட்டினர்.

பொன்னிறத்தாள் மதுரையிலும் நெல்லையிலும் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்புரிகிறாள்.

.
மேலும்