வளர்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்க அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்... எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடா மல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் பைரவரை வழிபட சிறந்த தினமாக அஷ்டமி தினம் கருதப்படுகிறது.
சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கை க்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக் கும் வழியமைத்து ஆசிர்வதிப்பார்.
வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபைரவர் அல்லது சொர்ணாகர்ஷண பைரவ ரை வழிபடலாம், வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் பணி புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறு வனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும். வீட்டில் உள்ள பீரோவில் வைத் தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறு வார ங்கள் 48 நாட்கள் விரதமி ருந்து தினமும் 108 முறை சொர்ணாகர்ஷண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக் க வேண்டும்.
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடை யாது. வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேர த்திலும் பைரவப்பெருமானை வழிபடலா ம். நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கி யிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும், அதனால், இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின் னர், நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும். அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, அக் கா, அண்ணன், தம்பி, தங்கை, கணவன், மனைவி இவர்களிடம் இருந்து வரும் காழ்ப்புணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்.
பைரவரின் அருள்
சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய் ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கியவ ரும் பைரவரே. தன் தமையன் எமன், பைர வரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவ ரை நோக்கி கடுமையானதவம் இருந்தான் தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவ ரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப் பிரமாணம் பெற்றுக்கொண்டார்.
சனியால் பாதிப்பு இருக்காது
சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந் தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மை யையே செய்ய வேண்டும்.
தைரியம் பிறக்கும்
பைரவரை மனதிற்கு விடாமல் நினைப்ப வர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தன்ன ம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் உண்டா கும். எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும்.
தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் வளர்பி றை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள், ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்ய கூடாது மீறினா ல் வழிபாட்டின் பலன்கள் கிடைப்பது கடினம்.
பொன்னும் பொருளும் கிடைக்கும்
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷ ண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திர பிரபை சூடி, திருக்கழுத் தில் நாகபர ணம் அணிந்து திருக்கரங்க ளில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந் திருக்க அதன் பின்னே சொர்ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவ பெருமானி ன் அருகில் வந்து அமர்ந்து ஒரு திருக்கர த்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடையை தழுவிய வாறு மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்ப த்துடன் அருகில் வந்து அமர்ந்து புன்ன கை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னை யும் பொருளையும் அள்ளித்த ரும் கோலத்துட ன் எழுந்தருளியுள்ளார். வளர்பிறை அஷ்டமி யில் வழிபட துன்பங் கள் நீங்கி செல்வ வளம் பெருகும்.