அருள்மிகு பைரவேஸ்வரி திருக்கோயில், கும்பகோணம்

By Tejas

அஷ்டமா சித்திகளும் இந்த பிறவியில் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா?

 

கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் சோழபுரம் என்ற ஊர் இருக்கிறது.

 

இங்கே அருள்மிகு பைரவேஸ்வரி உடனுறை பைரவேஸ்வரர் திருக்கோயில் இருக்கிறது .

பூமியில் உள்ள அனைத்து பைரவர் சன்னதிகளுக்கும் இந்த கோயிலில் இருந்து தான் பைரவ சக்திகள் சூட்சமமாக பரவிக் கொண்டே இருக்கின்றன.

 

 நவக்கிரகங்களுக்கு தலைவராக இருப்பவர் கால தேவன் என்ற காலபைரவர் ஆவார்.

 

இந்த கோயிலுக்கும் 8 பைரவ உலகங்களுக்கும் தெய்வீக சூட்சும தொடர்பு உண்டு.

 

தொடர்ந்து 64 தேய்பிறை அஷ்டமி நாட்களில் இங்கே வந்து அஷ்டமி பூஜையில் கலந்து கொண்டால் உங்களுக்கு இந்த பிறவியிலேயே அஷ்டமா  சித்திகள் கிடைத்துவிடும்.

 

அப்படி பார்த்தால் ஜோதிடம் கற்றுக் கொண்டு இருப்பவர்களும்

 

 ஜோதிடத்தை தொழிலாக பார்ப்பவர்களும் 

 

முக்காலத்தை மற்றவர்களுக்கு சொல்பவர்களும் 

 

அருள்வாக்கு சொல்பவர்களும் 

 

குறி சொல்பவர்களும்

 

 இங்கே மாதம் ஒருமுறை வந்து ஒரு முகூர்த்த நேரம் வரை ஜென்ம நட்சத்திர பைரவ மந்திரத்தை ஜெபம் செய்து கொண்டு இருக்க வேண்டும்.

 

கெட்ட பழக்கங்கள் விலக

 

இங்கே எந்த நாளிலும் குளிகை நேரத்தில் ஒரு தாம்பாளத்தில் ஐந்து  விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

 

 அதன் பிறகு அடிபிர தட்சணமாக 12 முறை வலம் வர வேண்டும் 

 

இந்த கோயில் முழுவதும் நல்ல வாசம் தரும் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும் 

 

வாசமுள்ள ஊதுபத்திகளை ஏற்றி வைக்க வேண்டும் 

 

கோதுமை உணவுகளை ஏழைகளுக்கு தானமாக தர வேண்டும்

 

 இப்படி மாதம் ஒரு நாள் விதம் 12 முறை செய்ய வேண்டும்.

 

 இந்த கோயிலுக்கு வரும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் முழுமையாக கருப்பு நிறம் கொண்ட நாய்களுக்கு உணவு தானம் செய்து வர வேண்டும்.

 

 இவ்வாறு செய்து வந்தால் மது அருந்துதல் புகை பிடித்தல்  மேலும் வெளியே சொல்ல முடியாத பல கெட்ட பழக்கங்களில் இருந்து முழுமையாக மீண்டு வரலாம்.

 

சோழபுரம் பைரவர் ஆலய தரிசனம்..

     மிகப்பழமையான ஆலயம்  

ஊரெங்கும் இருக்கும் 64பைரவர்களையும் ஒரே சமயம் வணங்குவது சாத்தியமா? சாத்தியம் தான். பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் மூல மூர்த்தியான சிவனே பைரவேஸ்வரர் எனும் பெயரில் கோயில் கொண்டுள்ள தலம். 

 

அது தான் கும்பகோணம்- சென்னை சாலையில் 13கிமி தூரத்தில் உள்ள சோழபுரம் .இதன் பழைய பெயர் பைரவபுரம்.இங்கு ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய சிவலிங்கத் திருமேனியைத் தரிசனம் செய்வதால் பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் மூர்த்தியாக பைரவேஸ்வரராக ஈஸ்வரன் தோன்றிய தலம்.

 

இத் தலத்தில் நிறைய மகான்கள் சித்தி அடைந்துள்ளனர், இக்கோவிலில் அஷ்ட புஜ பைரவர் சிலை உள்ளது , இங்கு 64 பீடங்கள் உள்ளது இந்த 64 பீடங்களிலும் 64 பைரவர்களும் அமர்ந்து பூஜையும் , தியானமும் செய்வதாக நம்ப படுகிறது , ராமாயண காலத்தில் ராவணன் கடுமையாக தவம் இருந்து நவகிரகங்களை கட்டி போட்டான், நவகிரகங்களில் சக்தி வாய்ந்த சனி பகவானும் செய்வதறியாமல் திகைத்தார் .

இத்தல ஸ்ரீ பைரவேஸ்வரிடம் தன் கடமையை செய்ய உதவி செய்யுமாறு வேண்டினார்,

இத்தலத்தில் அவருக்கு குளிகன் ( மாந்தி ) என்னும் மகன் பிறந்தார் .குளிகன் பிறந்த அந்த நேரமே ராவணன் அழிவு காலம் என்று ஸ்ரீ ராமர் போர் தொடுத்து ராவணனை அழித்தார் என்று தல புராணம் சொல்கிறது

 

பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் இங்கு பைரவ யோக முறையில் தவம் செய்துள்ளார். 

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதிமூலம் இந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் தான். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம். பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்கு தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்து செல்கிறார்கள். இந்த பைரவரை வழிபட்டால், பித்ரு தோசம், பித்ரு சாபங்களில் பல வருடங்கள் பாதிக்கப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமலிருப்பவர்களும், பில்லி, சூன்யம்,செய்வினை,ஏவல்,மாந்திரீகம் போன்ற பிரச்சினைகளும் அகலும்.

தேய்பிறை, அஷ்டமியில் மாலை நேரம் அபிஷேக அலங்காரங்களுடன் வழிபாடு நடத்தப்படுகிறது.

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் 

பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

சனிக்கு குருவாக விளங்குபவரர் இந்த பைரவர் தான் அதனால் சனிக்கிழமை சிறப்பு 

கால தேவன் என்று அழைக்கப்படுபவர் ஸ்ரீமஹா காலபைரவப் பெருமான்!

 

இவரை பல கோடி ஆண்டுகளாக தியானித்து பைரவ சித்தராக ஆனவர்தான் ஸ்ரீ வாரதாரகர் என்ற சித்தர் ஆவார்;

ஆலயமூர்த்திகள் ....

கருவறையில் இறைவன் பைரவேஸ்வரர் பெரிய லிங்கமாக கம்பீரத்துடன் உள்ளார், இறைவி தென்புறம் நோக்கியபடி உள்ளார். கருவறை வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் மாடங்களில் உள்ளனர். கருவறை கோஷ்ட்ட தெய்வங்களாக விநாயகர், நடராஜர், கங்காளமூர்த்தி, தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், ஆலிங்கன மூர்த்தி, துர்க்கை, அஷ்டபுஜ பைரவர் ஆகியோர் உள்ளனர்.

.
மேலும்