தீபம் + ஒளி என்ற சொல்லின் கூட்டு சேர்க்கை தான் தீபவொளி. பின்னர் மருவி தீபாவளி ஆனது, எனவே தீபம் என்றால் " வெளிச்சம் வருவதையோ, அல்லது வெளிச்சம் வெளிப்டபடுவதையோ குறிக்கிறது.
"தமஸோமா ஜோதிர்கமய" என்று வேத இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இருளில் இருக்காதே, வெளிச்சத்திற்கு வாருங்கள்', என்று அர்த்தம். இதன் உள் அர்த்தம் என்ன வென்றால் 'ஆன்மீக விழிப்புணர்வு வரவேண்டும் என்பதே'. கலங்கப்பட்ட மனதை பகவானின் திருநாமங்களாலும், அவரது அற்புதமான லீலைகளை கேட்பதாலும், அவருக்கு சுயநலம் இல்லாமல் தூய அன்பு தொண்டை புரிவதாலும்.ஆன்மீக விழிப்புணர்வு அடையாளம்.
திருவிழா மற்றும் பண்டிகை கொண்டாடங்களின் நோக்கம் அந்த நாளில் இறைவன் செய்த அற்புதமான லீலைகளை நினைவு கூர்ந்து அவரை வழிபடுவதாகும். இந்த திருவிழா மற்றும் கொண்டாட்டங்களின் உண்மையான அர்த்தங்களை புரிந்து கொள்ளாவிட்டால், அவை வெறும் பெயரளவில் சடங்குகளாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்.
இந்த திருவிழா மற்றும் கொண்டாட்டங்களின் உண்மையான காரண காரியங்களை அறிந்து அதை நினைவில் கொண்டு, மற்றவர்களுக்கும் எடுத்து சொல்வதினால். இந்த திருவிழா கொண்டாட்டங்கள் நமக்கும், நம்மை சார்ந்த அணைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும். இந்த பண்டிகைகள் திருவிழாகள் காலம் காலமாக இறைவனின் லீலைகளை நினைவில் கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றன. அவைகளை சில இங்கே காண்போம். தீபாவளி பின்வரும் காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது
1) பகவான் ஶ்ரீ ராமர் 14 ஆண்டுகள் வனவாசத்திலிருந்து அயோத்தியா திரும்பிய நாள் இந்நன்நாள்.
2) பாற்கடலில் இருந்து மஹா லட்சுமிதேவி அவதரித்த நாள் இந்நன்நாள்.
3) ஆயுர்வேதத்தை வழங்கிய பகவான் ஶ்ரீ தன்வந்திரி அவதரித்த நாள் இந்நன்நாள்.
4) பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் 16,100 இளவரசிகளை நரகாசுரன் என்ற அரக்கனின் பிடியில் இருந்து விடுவித்த நாள் இந்நன்நாள்.
5) அன்னை யசோதா தேவி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கயிறால் உரலில் கட்டிபோட்ட தாமோதர லீலை நடைபெற நாள் இந்நன்நாள்.
6) 5000 ஆண்டுகளுக்கு முன் துரியோதனன் யுத்தத்தில் கொல்லப்பட்டதால், நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் தீபங்களை ஏற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் வெற்றி , பாண்டவர்களின் வெற்றி மற்றும் நன்மைக்கு கிடைத்த வெற்றி என்று கோலாகலமாக கொண்டாடிய நாள் இந்நன்நாள். 7) குபேரன் ,பிரபஞ்சத்தின் செல்வத்தை நிர்வாகம் செயய பகவான் கிருஷ்ணரால் பதவி ஏற்றுக்கொண்ட நாள் இந்நன்நாள். 9) யம தர்மராஜன், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களின் அனைத்து செயல்களின் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை, பகவான் கிருஷ்ணரால் நியமிக்கப்பட்ட நாள் இந்நன்நாள்.
10) மன்னர் விக்ரமாதித்யன் பதவியேற்ற நாள். வேத காலண்டர் அன்றிலிருந்து தொடங்குகிறது.
11) பாற்கடலில் இருந்து சுரபி பசு அவதரித்த நாள் இந்நன்நாள்.
12) இந்திரனின் மழையிலிருந்து விரஜ வாசிகளை பாதுகாக்க பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கோவர்தன் மலையைத் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக தூக்கிய நாள் இந்நன்நாள்.
13) ரக்ஷா பந்தன் எவ்வாறு சகோதரிகள், சகோதரர்களை அனுக்கிரகம் செய்யும் நாளாக கொண்டாடபடுகிறதோ அதே போல் இந்த தீபாவளி நாளில் பிராத்ரி தூஜா என்று சகோதரர்கள் தங்களது சகோதரிகளுக்கு அனுக்கிரகம் செய்யும் நாளாக கொண்டாடபடுகிறது.
யம தர்மராஜன் தனது சகோதரி யமுனையை (யமுனை நதி தேவி) கண்டு அவரை அனுக்கிரகம் செய்து கூறினார்." இந்த நாளில் யாரொருவர் யமுனை நதியில் நீராடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் யமுனையில் நிகழ்த்திய லீலைகளை நினைவில் கொள்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்த அணைத்து பாவங்களுக்கும் விமோசனம் அளிப்பதாக சகோதரி யமுனைக்கு வாக்குறுதி அளித்தார்.
மேற்கு வங்காளத்தில் இந்த நாளை பாய் புட்டா (சகோதரி, சகோதரனுக்கு திலகம் இடுதல்) என்று கொண்டாடபடுகிறது.
சகோதரி , சகோதரனை தனது இல்லத்திற்கு வரவேற்று ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகம் இட்டு புத்தாடை வழங்கி, விருந்து படைத்துபடைப்பார்கள். சகோதரனும் சகோதரிக்கு பரிசு பொருட்கள் தந்து தான் அவளது சுக துக்கங்களுக்கு உறுதுணையாக என்றும் இருப்பேன் என்று வாக்குறுதி தந்து தனது அன்பை வெளிபடுத்துவார். சகோதரர், அன்று ஒருநாள் அங்கே தங்கி மறுநாள் இல்லம் திரும்புவார்.